Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நான்காவது கவின்கேர்-எம்எம்ஏ சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருதுகள்

 நான்காவது கவின்கேர்-எம்எம்ஏ சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருதுகளுக்கு உரிய  2015-ற்கான விண்ணப்பங்களை கவின்கேர்-எம்எம்ஏ வரவேற்கிறது சிறு மற்றும் குறு தொழில்முனைவோர்களுக்கு வழங்கப்படும் இவ்விருது காலம்சென்ற  திரு. ஆர். சின்னிகிருஷ்ணன் நினைவாக தொடங்கப்பட்டது.  2015 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் கவின்கேர்-எம்எம்ஏ சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருதுகள் 2015-ன் நான்காவது பதிப்பானது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலிருந்து விண்ணப்பங்களை இப்போது வரவேற்கிறது. சிறப்பாக வளர்ந்து செயலாற்றிவரும் சிறு மற்றும் குறு தொழில்முனைவோர்களை கௌரவிப்பதற்காக கவின்கேர்; இந்த ஆண்டு மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேசன்-உடன்  கூட்டாக இணைந்திருப்பதால் இவ்விருதானது, முன்பைவிட பெரியதாகவும் வலுவானதாகவும் உருவெடுத்திருக்கிறது. நம்நாட்டில் சாஷேக்களை அறிமுகப்படுத்தி புதுமை புரட்சியை முன்னோடித்துவமாக தொடங்கிவைத்த காலம்சென்ற திரு. ஆர். சின்னிகிருஷ்ணன் அவர்கள் நினைவாக இந்த கார்பரேட் சமூக பொறுப்புறுதி செயல்திட்டம் ; (CSR) நிறுவப்பட்டிருக்கிறது. புதுமையான சிந்தனைகளை உருவாக்குபவராக மற்றும் புதுமை படைப்பாளியாக திகழ்ந்த திரு. ஆர். சின்னிகிருஷ்ணன் அவர்களின் சிறப்பியல் பண்புகளை இவ்விருது நினைவுகூர்ந்து கௌரவிக்கிறது.

தனித்துவ பண்பு, தரமுயர்த்தும் திறன் மற்றும் மக்களுக்கு பயனளிக்கும் விதம் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படும். இந்திய குடிமக்களாக இருந்து ரூ. 5 கோடிக்கும் மிகைப்படாத வருடாந்திர விற்றுமுதலோடு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சிறுஃகுறு நிறுவனங்களின் தலைமையகங்களை கொண்டு இயங்கிவருகின்ற தொழில்முனைவோர்கள் இவ்விருதுக்கான போட்டியில் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாக கருதப்படுவர். விண்ணப்பப்படிவங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி  ஜூலை 15, 2015 ஆகும். தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறும்பட்டியலில் இடம்பெறும். அதன்தொடர்ச்சியாக, பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழில்துறை வல்லுநர்களை உள்ளடக்கிய நடுவர்கள் குழு வெற்றியாளர்களை இறுதியாக தேர்வு செய்யும். விண்ணப்பதாரர;கள் தங்களது தொழிலில் இடம்பெறச் செய்துள்ள பல்வேறு சிறப்பு திறன்களின் அடிப்படையில் வல்லுநர் குழுவினால் தெரிவுசெய்யப்பட்டு விருது வென்றவர்களுக்கு கவின்கேர்-எம்எம்ஏ இணைந்து ஆலோசனைகளை வழங்கி விருதுபெற்றவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும். இந்த சிஎஸ்ஆர் செயல்முயற்சியின் ஒரு பகுதியாக விருதுகளுக்காக தேர்வு செய்யப்படும் நிறுவனங்களில் நிதிசார்ந்த எந்தவொரு முதலீடு ஃ பங்கினை கவின்கேர்-எம்எம்ஏ செய்யாது.
 
கவின்கேர் பிரைவேட் லிமிடெட்டின் சேர்மனும் நிர்வாக இயக்குநருமான திரு. சி.கே. ரங்கனாதன் இவ்விருது பற்றி கூறுகையில்,'விருதுகள் தொடங்கப்பட்ட நாளிலிருந்து ஆண் மற்றும் பெண் தொழில் முனைவோர்களால் நடைபெறும் சிறு மற்றும் குறு நிறுவனங்களின் புதுமையான தொழில்முயற்சிகளுக்கு வழங்குகின்ற தனது உறுதியான ஆதரவின்மூலம் சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருதுகள் திட்டமானது தனிச்சிறப்புடன் புகழ்பெற்று திகழ்ந்துவருகிறது. இந்த ஆண்டு, இதனை மாபெரும் வெற்றிச் செயல்திட்டமாக ஆக்குவதற்காக எம்எம்ஏ-வுடன் நாங்கள் கைகோர்த்திருக்கிறோம். மாநிலம் முழுவதிலுமுள்ள அதிக எண்ணிக்கையிலான புதுமை சிற்பிகளை இவ்வாறு இணைந்திருப்பதன்மூலம் தொழில்முனைவோர்கள் தங்கள் இலக்கை சென்றடைய இயலுமென்று நாங்கள் நம்புகிறோம். கடந்த ஆண்டுகளில் எங்களுக்கு கிடைத்த மாபெரும் ஆதரவு மற்றும் ஊக்குவிப்பு தற்பொழுது 4-வது முறையாக இந்நிகழ்வை நடத்துவதற்கு எங்களுக்கு ஊக்கம் தந்திருக்கிறது. தாங்கள் பெற்ற பயனை இந்த சமுதாயத்திற்கு திரும்ப தருவதற்கான அற்புதமான செயல்தளத்தை தொழில்முனைவோர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.
 
இயற்கையான, நச்சுப்பொருளற்ற மற்றும் இயற்கையாக மக்கிப்போகக்கூடிய பொருட்களை வழங்குவதில் கூர்நோக்கம் செலுத்துகின்ற ப்ரொகிளீன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்டின் திரு. டாக்டர;. எஸ். சிவராம கிருஷ்ணபிள்ளை, கண்ணாடி கற்கள் பொறியியலில் சிறப்பு கவனம் செலுத்தும் ஸ்பார்க்கோ ஸ்டோன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் திரு. என். குணசேகரன் மற்றும் இளம் பள்ளி மாணவர்களுக்காக கலை மற்றும் கலாச்சாரத்தோடு சேர்த்து அறிவியல் மற்றும் கல்வியை மேம்படுத்தி வளர்க்கிற சர்வதேச செயல்தளங்களை உருவாக்குகிற ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் திருமதி. ஸ்ரீமதி கே. ஆகியோர் இதற்கு முந்தைய பதிப்புகளில் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டவர்களாவர்.164 விண்ணப்பதாரர்களிலிருந்து இந்த வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
காலம்சென்ற திரு. ஆர். சின்னிகிருஷ்ணன், தனது வாழ்நாளில் ஒரு மிகப்பெரிய கனவையும், இலட்சியத்தையும் கொண்ட செயல்வீரராக திகழ்ந்தவர். 'பணக்காரர்கள் வாங்கி அனுபவித்து மகிழும் பொருட்கள், ஏழை மனிதனும் வாங்கி பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்” என்ற எளிமையான கோட்பாட்டின் அடிப்படையில் அவரது சிந்தனைகள் அமைந்திருந்தன. சாஷேயில் ஷாம்புக்களை அடைத்து விற்பனை செய்கின்ற உத்தி திரு. சின்னிகிருஷ்ணன் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டதாகும். மிக குறுகிய காலத்திற்குள்ளே அவரது சிந்தனையில் பிறந்த இத்திட்டமானது கிராமப்புற சந்தையெங்கிலும் பரவி ஒரு ஆக்கபூர்வ புரட்சிக்கு வழிவகுத்தது. திரு. சின்னிகிருஷ்ணன் அவர்களின் பொன்மொழிகளை பின்பற்றுகின்ற பொறுப்புகளையும், அவரது கனவுகளையும், விழுமியங்களையும் உயிரோட்டமுள்ளதாக இந்த விருதுகள் வழியாக பேணிப் பராமரிக்கும் பொறுப்பினையும் கவின்கேர் எடுத்துக்கொண்டிருக்கிறது.
இந்த விருதுகளுக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இதற்கான விண்ணப்பப்படிவத்தை <www.mmachennnai.org/www.cavinkare.com>, என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருது, மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன், 21ஃ11 3வது குறுக்கு தெரு, சீத்தாம்மாள் விரிவு, தேனாம்பேட்டை, சென்னை - 600018 என்ற முகவரிக்கு  அல்லது  head-cce@mmachennai.org/mma@mmachennai.org.cceஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண்: 96770 77700 /94440 58176
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ