Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம்

 இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது  கனவு திட்டங்களில் ஒன்றான டிஜிட்டல் இந்தியா திட்டத்தை நேற்று ( ஜூலை 1,2015) துவங்கி வைத்து பேசிய போது , இதன் மூலம் பல நிறுவனங்களில் இருந்து ரூ. 4.5 லட்சம் கோடி முதலீடு கிடைக்கும் என்றும் , சுமார் 18 லட்சம் பேருக்கும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்தார்


உலகம் மின்னல் வேகத்தில் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் நவீன தொழில் நுட்பத்தால் கிடைக்க கூடிய பலன்கள் எல்லா மக்களுக்கும் கிடைப்பதில்லை . இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் இந்திய சமூகத்தில் உள்ள கடைகோடி மனிதனுக்கும் டிஜிட்டல் சேவைகளை கொண்டு சேர்ப்பதாகும். தகவல் தொழில் நுட்ப துறையை மேம்படுத்துவது , அதிக அளவில் இளைய தலைமுறையினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவது ,அரசு வழங்குகிற சேவைகள் அனைத்தையும் ஆன்லைனுக்கு மாற்றுவது, கிராமங்களுக்கு அதிவேக இணைய வசதி, தகவல் தொழில்நுட்ப துறையில் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது ஆகும்.


இந்த திட்டத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்போகாம் ரூ. 2.5 லட்சம் கோடியை முதலீடு செய்கிறது


டி சி எஸ் நிறுவனம் தகவல் தொழில் நுட்ப துறையில் 60, 000 பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் சைரஸ் மிஸ்ரி தெரிவித்தார்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP