Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏர்டெல் No.3: உலகின் மிகப்பெரிய செல்போன் நிறுவனம்!

உலக செல்லூலார் தகவல் சேவை (டபிள்யூசிஐஎஸ்) வெளியிட்டிருக்கும் தகவலின்படி, உலகின் மிகப் பெரிய செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் பட்டியலில் பார்தி ஏர்டெல் நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிறுவனத்துக்கு உலகம் முழுவதிலும் மொத்தம் 30 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் . 20 நாடுகளில் செயல்படும் பார்தி ஏர்டெல் நிறுவனம் இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் முழு வீச்சில் இயங்கி வருகிறது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் சீனா மொபைல் 62.62 கோடி வாடிக்கையாளர்களுடன் முதல் இடத்தில் இருக்கிறது. வோடாபோன் நிறுவனம் 40.30 கோடி வாடிக்கையாளர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP