Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்: நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு அதிகரிப்பு!

சமீபத்தில் ஆம்ஃபி வெளியிட்ட அறிக்கையில், "நடப்பு 2015-16-ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு 40,000 கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஜனவரி-மார்ச் வரையிலான காலகட்டத்தில் இருந்த 11.94 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 12.34 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது" எனவும் தெரிவித்துள்ளது.

இது  மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்களின் முதலீடுகளை அதிகரித்து வருவதைச் சுட்டிக் காட்டுகிறது.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் தொடர்ந்து ஹெச்டிஎஃப்சி நிறுவனம் முதலிடத்தில் இருந்துவருகிறது. இது தற்போது 1.65 லட்சம் கோடி ரூபாயையை தனது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கீழ் நிர்வகித்து வருகிறது.

இதற்கு அடுத்த இடத்தில் ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் உள்ளது. இது நிர்வகித்துவரும் சொத்து மதிப்பு 1.55 லட்சம் கோடி ரூபாய். மூன்றாவது இடத்தில் 1.44 லட்சம் சொத்துமதிப்புடன் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ