Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு மாதம் மெட்ரோ ரயில் பயணம்! உங்கள் பர்ஸ் என்ன ஆகும்?

சென்னையில் மெட்ரோ ரயில் பயணம் துவங்கிவிட்ட நிலையில் பலரும் அதன் கட்டணம் சற்று அதிகமாக இருப்பதாக கூறினர். கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை செல்ல 40 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் ஒருவர் மட்டும் பயணிக்கிறார் என்றால் இந்த கட்டணம் அவருக்கு ஓரளவுக்கு தாக்குபிடிக்க கூடியதாக இருக்கும். ஆட்டோவில் பயணம் செய்யகிறவர்களுக்கு மெட்ரோ ரயில் ஒரு சிறந்த பயணமாக அமையும். அதுமட்டுமின்றி நேரமும் மிச்சமாகும். கூட்ட நெரிசலில் 40-45 நிமிடம் வரை ஆகும் ஆட்டோ பயணங்களுக்கு பதில் மெட்ரோ ரயில்களில் 20 நிமிடங்களே ஆவதால் ஆட்டோ பயணங்களைவிட மெட்ரோ பயணங்கள் மக்களை செலவை குறைப்பவையாக இருக்கிறது.மேலும் ஏசி பேருந்துகளில் பயணிப்பதற்கு, இதற்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை என்றாலும் நேரம் மிச்சமாவதால் ஏசி பேருந்து பயணிகள் மெட்ரோவை விரும்பலாம்.

ஒருவேளை குழுவாக நான்கு பேர் சேர்ந்து ஒரே இடத்துக்கு வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் கால் டேக்ஸி வசதியை பயன்படுத்துபவராக இருந்தால் கால் டேக்ஸிக்கும் மெட்ரோவுக்கும் செலவு விஷயத்தில் மாற்றமில்லை என்றாலும், மெட்ரோ ரயிலில் பயணம் நேரம் மிச்சமாகிறது.

மெட்ரோ ரயில் கட்டணம் அதிகம் என சிலர் கூறினாலும், புதிதாக வந்துள்ள மெட்ரோ ரயிலில் ஒருமுறையாவது பயணிக்க வேண்டும் செல்போனில் செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய வேண்டும் என்ற நோக்கில் பயணித்தாலும். கட்டணம் சற்று அதிகம் தான். அரசாங்கம் கட்டணத்தை குறைத்தால் நன்றாக இருக்கும் என்கின்றனர்.

 

இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் கட்டணங்களைவிட இங்கு கட்டணம் அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அனைத்து தரப்பினரும் கட்டணம் அதிகமாக உள்ளது என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அரசு கட்டணத்தை குறைத்தால் மெட்ரோ ரயில்கள் மூலம் மக்கள் துரிதமான பயண அனுபவத்தை மகிழ்ச்சியாக பெறுவார்கள் என்பது உறுதி.
 
மேலும், உங்கள் செலவுகளில் பயணக் கட்டணம் என்பது ஒருபகுதி மட்டுமே. இதற்கு எவ்வளவு செலவழிக்க வேண்டும் என்பதையும், அதற்கான சரியான நிதி ஒதுக்கீடையும் நீங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு, செய்வது நல்லது. 
 
ச.ஸ்ரீராம்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ