Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீன், இறால் மற்றும் நண்டு ஏற்றுமதி அதிகரிப்பு!

இந்தியாவிலிருந்து பல பொருட்கள் ஏற்றுமதியாகி வருவது நாம் எல்லோரும் அறிந்ததே. அந்த வகையில் கடன் வாழ் உயிரின உணவுகளான மீன், இறால், நண்டு போன்றவைகளும் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபட்டு வருகின்றன. நடப்பு நிதி ஆண்டில் கடன் வாழ் உயிரின உணவு வகைகள் ஏற்றுமதி பத்து லட்சம் டன்னை தாண்டியிருக்கிறது.

இதுவரை 10,51,243 டன் கடல்வாழ் உயிரின உணவுகள் ஏற்றுமதியாகியிருக்கின்றன. இதன் மொத்த மதிப்பு 33,441 லட்சம் கோடி ரூபாய்(5,511.12 மில்லியன் டாலர்). இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட, அளவில் 6.86% அதிகமாகும். ரூபாய் மதிப்பில் 10.69 சதவிகிதமும், டாலர் மதிப்பில் 10.05 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.

ஏற்றுமதி அதிகரித்திருந்தாலும், அதன் விலை ஒரு கிலோவுக்கு 10.38 டாலர் என்கிற அளவில்தான் காணப்படுகிறது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 10.65 டாலராக இருந்தது.

இந்தியாவிலிருந்து கடல்வாழ் உயிரின உணவுகளை அமெரிக்காதான் அதிகமாக இறக்குதி செய்கிறது. தற்போது இதன் பங்களிப்பு  1,12,702 டன். இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் (81,952 டன்), தென் கிழக்கு ஆசிய நாடுகள் (69,068 டன்) மற்றும் ஜப்பான் (30,434 டன்) ஆகிய நாடுகள் இறக்குமதி செய்கின்றன.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ