Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிராமப் புற பெண்களுக்கு இன்டர்நெட் பயிற்சி! டாடா, கூகுள் கூட்டு முயற்சி

டாடா குழுமத்தின் டாடா அறக்கட்டளை (Tata Trust) கூகுள் நிறுவனத்துடன் இணைந்து கிராமப் புறங்களில் உள்ள பெண்களுக்குத் தினமும் இணையத்தைப் பயன்படுத்து வகையில் ஏற்பாடுகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளது. 

இந்தத் திட்டத்துக்கு இன்டர்நெட் சாத்தி (Internet Saathi) எனப் பெயரிட்டுள்ளது.
 இந்த இரண்டு பெரிய நிறுவனங்களும் தொழில்நுட்ப ரீதியாக பெண்கள் முன்னேறுவதற்கு உதவும். ஏனெனில் கிராம புறங்களில் உள்ள பெண்களில் 12 சதவிகிதத்தினர் மட்டுமே இணையம் பயன்படுத்துகிறார்கள்.

முதல் கட்டமாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் துவங்க முடிவு செய்துள்ளது. மேலும் 4500 கிராமங்களில் உள்ள  5 லட்சம் பெண்கள் இதன் மூலமாகப் பயன் அடைவார்கள். இந்த இலக்கு அடுத்த 18 மாதங்களில் அடைவதற்கான ஏற்பாடு செய்யப்படும்.

இது குறித்து டாடா அறக்கட்டளையின் தலைவர் ரத்தன் டாடா கூறுகையில் " உலகம் முழுவதும் டிஜிட்டல் மையம் ஆக்க வேண்டும் என்பதுதான் கூகுள் நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது" என்றார்.

ஒவ்வொரு கிராமத்திலும் பெண்களுக்குத் தனியாக வடிவமைக்கப்பட்ட இன்டர்நெட் வசதிக் கொண்ட ஒரு வாகனம் வாரத்தில் இரண்டு நாட்கள் வீதம் அடுத்த 4 அல்லது 6 மாதங்களுக்கு இருக்கும். இந்த வாகனத்தில் பெண்களுக்கு  இணையம் குறித்த பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சி முடிந்த பிறகு 3 கிராமங்கள் சேர்த்து ஒரு தொகுப்பாக உருவாக்குவர்கள்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ