Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீட்டுக்கடன்: வீடு தேடி வரும் எஸ்பிஐ!

பொதுவாக தனியார் நிறுவனங்கள்தான் வீட்டுக்கடன், கிரெடிட் கார்டு கடன் சேவைகளை வீடு தேடி வந்து வழங்கும். தற்போது இந்த உத்தியை பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கையில் எடுத்திருக்கிறது. இந்த வங்கி "புராஜெக்ட் தக்கல்" என்கிற பெயரில் வீடு தேடி வந்து வீட்டுக் கடன் பெறுவதற்கான சேவையை செய்து கொடுக்க முடிவு செய்துள்ளது.

வீட்டுக் கடன் தேவைப்படுபவர்கள் வங்கியை அணுகினால், வீட்டுக்கடன் வழங்க தேவைப்படும் ஆவணங்களை வங்கி ஊழியர்களே வீட்டில் வந்து பெற்றுக் கொண்டு சேவைகளை வழங்குவார்கள்.

வீட்டுக்கடன் வழங்குவதில் முதன்மை நிறுவனமான இந்த வங்கி இதுவரை 30 லட்சம் பேருக்கு வீட்டுக்கடனை வழங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்த வங்கி 16.60 லட்சம் கோடி ரூபாய் கடனை வழங்கியிருக்கிறது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ