Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிஎஃப் பணம் தர மறுத்தால் எங்கு புகார் செய்வது!

நான் கடந்த 4 ஆண்டுகளாக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். சம்பளம் கொடுக்கும்போது பிஎஃப் தொகையைப் பிடித்தம் செய்தார்கள். இப்போது பிஎஃப் அலுவலகத்தில் கேட்டால் என் பெயரில் கணக்கு இல்லை என்று சொல்கிறார்கள். இதற்கு யாரிடம் சென்று முறையிடுவது?

ஜி.ராம்கணேஷ், திருவள்ளூர்,
சென்னை மண்டல பிஎஃப் அலுவலகத்திலிருந்து:
‘‘உங்கள் பகுதியில் உள்ள மண்டல பிஎஃப் அலுவலகத்தில் எழுத்து மூலமாக புகார் அளிக்கலாம். இதனுடன் நீங்கள் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்ததற்கான ஆதாரத்தையும், சம்பளத்தில் பிஎஃப் பிடித்தம் செய்யப்பட்டதற்கான ஆதாரத்தையும் கொடுக்க வேண்டும்.
இதைத் தவிர்த்து 
http://epfigms.gov.in/grievanceRegnFrm.aspx?csession=dHwqKTjehIm&
 என்ற பிஎஃப் இணையதளத்திலும் புகார் தெரிவிக்கலாம். இங்கு பதிவு செய்யும் புகாருக்கு சம்பந்தப்பட்ட அதிகாரி 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் உடனடியாக அடுத்த உயர் அதிகாரிக்கு அந்த புகார் சென்று விடும்.’’
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ