Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சேமிக்கு கணக்கில் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டுமா?

எனக்கு இரண்டு வங்கிகளில் சேமிப்புக் கணக்குகள் இருக்கின்றன. இவற்றின் மூலம் தலா ரூ.12,000 மற்றும் ரூ.8,000 வட்டி வருமானம் கிடைத்துள்ளது. இவற்றுக்கு எப்படி வருமான வரி கட்ட வேண்டும்?
ஆர்.ராஜேஷ்குமார், ஸ்ரீபெரும்புதூர்,
என்.பி.இசை அழகன், ஆடிட்டர், இசை அண்ட் கோ,
‘‘இரண்டு சேமிப்புக் கணக்கு மூலம் கிடைத்த மொத்த வட்டி ரூ.20,000-ல் ரூ. 10,000-க்கு வருமான வரிச் சட்டம், பிரிவு 80TTA-ன் கீழ் வரிவிலக்கு பெற முடியும். மீதமுள்ள ரூ.10,000-ஐ இதர வருமானமான சம்பளத்துடன் சேர்த்தபின் வருமான வரி அடிப்படை வரம்பைத் தாண்டினால் வரி செலுத்த வேண்டும். மாறாக அவ்வாறு சேர்த்தபின்பும் அடிப்படை வரம்புக்குள் இருப்பின் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.’’
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ