Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓய்வு காலத்தில் மாதம் ரூ. 40,000 எந்த ஃபண்டில் பெஸ்ட்!

என் வயது 30. எனக்கு இரண்டு மகன்கள். அவர்களின் வயது 2 மற்றும் 5. நான் கடந்த இரண்டு வருடமாக மாதம் 15,000 ரூபாய் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வருகிறேன். பிர்லா சன் லைஃப் டாப் 100 ஃபண்டில் ரூ.3,000, ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டில் ரூ.3,000, ஃப்ராங்க்ளின் இந்தியா டெம்பிள்டன் பிரைமா ப்ளஸில் மாதம் ரூ.2,000, எஸ்பிஐ பார்மா ஃபண்டில் மாதம் ரூ.3,000, ஐசிஐசிஐ புரூடென்ஷியல் சைல்டு கேர் பிளானில் மாதம் ரூ.4,000 முதலீடு செய்து வருகிறேன். இந்த முதலீடுகளை வைத்து என் இரண்டு மகன்களின் கல்லூரிப் படிப்புக்கும், என் ஓய்வுக்காலத்தில் (60 வயதுக்குப்பின்) மாதம் ரூ.40,000மும் கிடைக்குமா?

மு.பூச்சந்திரன், ஈரோடு,
எஸ்.ராஜசேகரன், நிதி ஆலோசகர், விஸ்டம் வெல்த் கன்சல்டன்சி.
‘‘குழந்தைகளின் கல்விக்கு நீங்கள் முதலீடு செய்துவரும் ஃபண்டைக் காட்டிலும் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் சில்ட்ரன்ஸ் கிஃப்ட் ஃபண்டில் முதலீடு செய்தால், ஆண்டுக்குத் தோராயமாக 15% வருமானம் கிடைக்கக்கூடும். அதோடு 18 வயது முடிவதற்குமுன் இந்த ஃபண்டில் செய்த முதலீடுகளைத் திரும்ப எடுக்க முடியாது என்பதால் தாராளமாக இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். இது தவிர, மற்ற முதலீடுகளை நல்ல வருமானம் தரக்கூடிய ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறீர்கள். இந்த ஃபண்டுகள் மூலம் தாராளமாக ஆண்டுக்கு 12% வருமானம் கிடைக்கும்.
எனவே, தோராயமாக உங்கள் 55-வது வயதில் அல்லது 25 வருடம் கழித்து 1.85 கோடி ரூபாய் கிடைக்கும். இந்தத் தொகையில் ஒரு கோடி ரூபாயை 8 சதவிகிதத்துக்குக் கூடுதலாக வருமானம் தரக்கூடிய லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் மாதம் ஒன்றுக்கு சுமார் 65,000 ரூபாய் கிடைக்கும்.
எனவே, உங்கள் ஓய்வுக் காலத்தை எந்தப் பிரச்னையும் இல்லாமல் கழிக்கலாம். இதுதவிர, மீதமுள்ள தொகையை வைத்து உங்கள் மகன்களின் எதிர்காலச் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.’’
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close