Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என் ஆர் ஐ முதலீடு இந்தியா வந்த பிறகு தொடர முடியுமா?

 நான் கத்தாரில் வசித்து வருகிறேன்.  கடந்த ஆண்டுகளில் என் டீமேட் கணக்கு மற்றும் என்ஆர்இ கணக்கு மூலம் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து இருக்கிறேன். தற்போது நான் இந்தியாவுக்கு நிரந்தரமாக வந்துவிட்டால், என் முதலீடுகளை என்ன செய்ய வேண்டும் ?

ஆர். சுப்ரமணியன், கத்தார்,
சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட்.
‘‘நீங்கள் நிரந்தரமாகத் தாயகம் திரும்பிவிட்டால் உங்களுடைய என்ஆர்இ மற்றும் என்ஆர்ஓ வங்கி சேமிப்புக் கணக்குகளைக் குளோஸ் செய்ய வேண்டும். அந்த வங்கிக் கணக்குகளை குளோஸ் செய்ததற்கான கடிதத்தையும் வங்கி களிடமிருந்து பெறவேண்டும். உள்நாட்டில் இருப்பவர்களுக்கான புதிய டீமேட் கணக்கைத் திறக்க வேண்டும்.
என்ஆர்இ/என்ஆர்ஓ டீமேட் கணக்குகளில் உள்ள பங்குகளை, மியூச்சுவல் ஃபண்டுகளைப் புதிதாகத் திறந்த டீமேட் கணக்குக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.
பலர் ஐசிஐசிஐ டைரக்ட் மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது, டீமேட் கணக்கு மூலம் முதலீடு செய்வதாக நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு. அந்த முதலீடுகள் பிசிக்கலாகத்தான் இருக்கிறது.
அவ்வாறு இருக்கும்போது, நீங்கள் புதிய வங்கிக் கணக்கோடு உங்களது முதலீடுகளை இணைத்துவிட்டாலே போதும். அவ்வாறு முதலீடுகளைப் புதிய கணக்குடன் இணைக்கும்போது, பழைய என்ஆர்இ/என்ஆர்ஓ கணக்கை மூடிவிட்டதற்கான கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.’’
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close