Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செல்ஃபி மூலம் பணபரிவர்த்தனை!

இன்றைய நிலையில் செல்ஃபி மோகம் தாண்டவமாடி வருகிறது. செல்ஃபியை வெறும் புகைப்படமாக மட்டுமே பார்க்காமல், அதை பணபரிவர்த்தனை பாதுகாப்பிற்கான ஒரு விஷயமாக மாற்றியிருக்கிறது மாஸ்டர்கார்டு நிறுவனம். இந்த நிறுவனம் ‘செல்ஃபி’ புகைப்படம் மூலம் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு பாஸ்வேர்டு, ஓடிபி என பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும். ஹேக்கர்கள் பாஸ்வேர்டுகளை ஈஷியாக கண்டுபிடித்து உள்நுழைந்து விடுகிறார்கள். இந்த பிரச்னையை போக்குவதற்காகத்தான் மாஸ்டர்கார்டு செல்ஃபி திட்டத்தை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து, " இன்றைய இளைஞர்கள் செல்பியை அதிகம் விரும்புகின்றனர், எங்களது புதிய திட்டம் அவர்களிடம் அமோக வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறோம். பாஸ்வேர்டு உள்ளிட்ட முறைகளில் சில நேரங்களில் மோசடிகள் நடைபெறுகின்றன.

அதனால்தான் முகத்தை ஸ்கேன் செய்து வாடிக்கையாளரை அடையாளம் காணும் வகையில் செல்பி ஆன்லைன் பணப் பரிவர்த்தனை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். முதல்கட்டமாக அமெரிக்காவில் 500 பேர் சோதனை அடிப்படையில் இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். விரைவில் உலகம் முழுவதும் செல்பி திட்டம் விரிவுபடுத்தப்படும்" என்று அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி, அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.
 

மாஸ்டர்கார்டு ஆப்ஸ்!
இந்த பாதுகாப்பு நடைமுறைய மேற்கொள்ள, தங்களின் ஸ்மார்ட்போனில் மாஸ்டர்கார்டு அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். அதன் வழியாக, தங்களின் செல்ஃபி புகைப்படத்தை பதிவு செய்து வைத்து கொண்டால், அதன்பிறகு மேற்கொள்ளும் பணபரிவர்த்தனையின் போதெல்லாம் முகத்தை ஸ்கேன் செய்து பாதுகாப்பான ஆன்லைன் பணபரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ