Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிரீஸ் நிதி அமைச்சர் ராஜினாமா

 கிரீஸ் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கிரீஸ் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேவையான 29 பில்லியன் யூரோவை ஐரோப்பிய கூட்டமைப்பிடம் நிதி உதவியாக வழங்குமாறு கேட்டிருந்தது.

 

அப்போது ஐரோப்பிய கூட்டமைப்பு நிதி உதவி வழங்க வேண்டுமானால் கிரீஸ் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் போன்ற பல நிபந்தனைகளை விதித்தது .

 ஐரோப்பிய கூட்டமைப்பு விதித்த  நிபந்தனைகளை ஏற்பதா ? வேண்டாமா ? என்பது பற்றிய கருத்துகளை பொது மக்களிடம் கேட்க ஒரு பொது வாக்கெடுப்பை ஜூலை 5 ம் தேதி கிரீஸ் அரசு நடத்தியது .


 இந்த வாக்கெடுப்பை ஒட்டி கிரீஸ் முழுவதும் ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் பல பேரணிகள் நடைபெற்றது. வாக்கெடுப்பின் முடிவு இன்று வெளியாகி இருக்கிறது. 61 சதவிகித மக்கள் நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என்றும், 39 சதவிகித மக்கள் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளலாம் என்றும் வாக்களித்துள்ளனர். 


 இந்த வாக்கெடுப்பின் எதிரொலியாக இன்று காலையில் கிரீஸ் நாட்டின் நிதி அமைச்சர் யானிஸ் வெரோபாகிஸ் ராஜினாமா செய்துள்ளார். 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ