Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2015-16 எதிர்பார்ப்பு: 40 புதிய ஐபிஓ வெளியீடு!

பங்குச் சந்தையில் நிறுவனங்கள் பொது பங்கு வெளீயீடு மூலம் (ஐபிஓ) நிதி திரட்டுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பங்குச் சந்தை சூழ்நிலைகள் மேம்பட்டு வருவதால், நடப்பு 2015-16-ம் நிதி ஆண்டில் 40 பொது பங்கு வெளியீடு  இருக்கும் என்று பிஎஸ்இ தெரிவித்துள்ளது.

அதே போல 100 சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பட்டியலிடப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் பிஎஸ்இ தெரிவித்துள்ளது.

சென்ற 2014-15-ம் நிதி ஆண்டில் மும்பை பங்குச் சந்தையான பிஎஸ்இ -யில் ஆறு முக்கிய ஐபிஓ-க்களும், எம்எஸ்இ பிரிவில் 35 நிறுவனங்களும் பட்டியலிடப்பட்டன. இந்த நிறுவனங்கள் திரட்டிய மொத்த தொகை ரூ.1,200 கோடியாகும்.

இது குறித்து, "நடப்பு நிதி ஆண்டில் பத்து மடங்குக்கு மே நிதி திரட்ட வாய்ப்பு உள்ளதாகவும், இது வரை 53 நிறுவனங்கள் விண்ணப்பித்திருப்பதாகவும், மேலும் பல முக்கியமான நிறுவனங்கள் பொது பங்கு வெளியிட திட்டம் வைத்திருப்பதாகவும்" பிஎஸ்இ தலைவர் ஆஷிஷ் குமார் தெரிவித்திருக்கிறார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ