Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிசம்பர், 2016-ல் நிஃப்டி இலக்கு 11000 புள்ளிகள்!

இன்றைய நிலையில் கிரீஸ் நாட்டின் பொருளாதார நிலவரம் உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

அந்த நாட்டின் பொருளாதார பாதிப்பால், இந்திய பங்குச் சந்தைகள் பாதிக்கப்படுமோ என்கிற அச்சம் நிலவி வந்தது. ஆனால் இதன் தாக்கம், கடந்த திங்கள்கிழமை (29.6.15) அன்று மட்டும் காணப்பட்டது.

அன்றைய தின வர்த்தகத்தில் மட்டும் தேதிய பங்குச் சந்தையான நிஃப்டி 300 புள்ளிகள் குறைந்து வர்த்தகமானது.

"கிரீஸின் பொருளாதார பிரச்னையால் குறுகிய கால நிலையில் பாதிப்புகள் இருந்தாலும்கூட, நீண்டகால நோக்கில் தேசிய பங்குச் சந்தையான நிப்ஃடி அதிகரித்தே வர்த்தகமாகும்.

அதாவது, நடப்பு காலண்டர் வருடத்துக்குள் நிஃப்டி 10,000 புள்ளிகளை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது டிசம்பர் 2016-க்குள் 11,000 புள்ளிகளாக உயரும். இது தற்போதைய நிலையைவிட 30% அதிகமாகும்" என்று ஆண்ட்ரூ ஹோலண்ட், சிஇஓ, அம்பிட் இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸர் தெரிவித்துள்ளார்.

 "பங்குகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு முதலீட்டாளர்களுக்கு அதிகம் காணப்படுகிறது. அதே சமயம் நடப்பு ஆண்டில் சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கும் என்பதால், முதலீட்டாளர்கள் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்காவது பொறுமையாக இருங்கள். நடப்பு காலகட்டத்தில் குறுகிய நாட்களில் லாபத்தை பார்த்துவிட முடியாது" என டைமன்ஸன் கன்ஷல்டிங் நிறுவனத்தின் சிஇஓ அஜய் ஸ்ரீவஸ்தவா குறிப்பிட்டிருக்கிறார்.

இதனால் முதலீட்டாளர்கள் நல்ல பங்குகளை விற்காமல் குறைந்தது இரண்டு ஆண்டுகள் வைத்திருந்தால் லாபம் பார்க்கலாம்.

சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன்கூட கிரீஸ் நாட்டின் பொருளாதார பாதிப்பால், இந்திய பொருளாதாரத்துக்கு நேரடி பாதிப்புகள் கிடையாது என்று சொன்னது குறிப்பிடத்தக்கது.

இன்றைய (6.7.15) வர்த்தக முடிவில் நிஃப்டி 8,500 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகமாகியுள்ளது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ