Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்பைஸ்ஜெட் அதிரடி ஆஃபர்: ரூ.1,899!

இந்திய விமான நிறுவனங்களிலேயே, அதிக ஆஃபர்களை வழங்கும் நிறுவனம் என்கிற பெயரை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் பெற்றிருக்கிறது. ஏனெனில், இந்த நிறுவனம் அவ்வப்போது பயணிகளின் வசதிக்காக கட்டணங்களை குறைக்கும்.

அந்த வகையில் இந்த நிறுவனம் சமீபத்தில் " ரெட் ஹாட் ஃபேர்" என்கிற பெயரில்.கட்டண குறைப்பு சலுகையை வெளியிட்டுள்ளது. விமானத்தில் பயணம் மேற்கொள்ள நினைப்பவர்கள் ஜூலை 8-ம் தேதி நள்ளிரவு வரை இந்த ஆஃபரை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும்,  மும்பை கோவா, அகமதாபாத் மும்ப, பெங்களூர் ஹைதராபாத், சென்னை பெங்களூர் இடையிலான குறைந்தபட்ச கட்டணம் ரூ. 1,899 எனவும் தான் வெளியிட்டிருக்கும்  அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

ஜூலை 15-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையான இடைப்பட்ட காலத்துக்கு இந்த ஆஃபரை பயன்டுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ