Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஹேக்'-ஆன ஹவுஸிங் டாட் காம் இணையதளம்!

ஆன்லைன் மூலம் ரியல் எஸ்டேட் செய்துவரும் நிறுவனமான ஹவுஸிங் டாட் காம் நிறுவனத்தின் இணையதளம் கடந்த திங்கள்கிழமை அன்று 'ஹேக்' செய்யப்பட்டு, மீண்டும் செயல்படத் தொடங்கியது.

இந்த நிறுவனத்தின் இணையதளம் 'ஹேக்' செய்யப்படுவதற்கு காரணம், ஒரு வாரத்துக்கு முன்பு இந்த நிறுவனத்தின் சி.இ.ஒ. பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராகுல் யாதவ்தான் என்கிற தகவல் காட்டுத்தீயாக பரவியது.
 
ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார் ராகுல் யாதவ். இதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தனது ஃபேஸ்புக்கில் சொல்லி இருக்கிறார் ராகுல் யாதவ்.
 
ஹவிஸிங் டாட் காம் நிறுவனத்திலிருந்து ராகுல் யாதவ் விலகினாலும், அந்த நிறுவனம் செய்திகளில் அடிபடுவது மட்டும் குறையவே இல்லை!

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ