Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓலாவுக்கு புதிய இயக்குநர்!

மொபைல் ஆப்ஸ் வழியாக இயங்குகின்ற டாக்ஸி நிறுவனமான ஓலா, தனது நிறுவனத்துக்கு புதிய சுயாதீன இயக்குனராக (Independent director) அருண் சரினை நியமித்துள்ளது. 
 
புதிய சுயாதீன இயக்குநரான அருண் சரின், இதற்கு முன்பு வோடபோன் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
'அருணின் உலகளாவிய பார்வையும், வளர்ந்துவரும் இந்திய சந்தைகளை பற்றிய புரிதலும் எங்களின் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை தரும்' என்று ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்தார். 
 
ஓலா நிறுவனத்தின் ஒட்டுமொத்த வணிக யுக்திகளுக்கும் அருண் சரின் வழிகாட்டியாக ஆலோசகராக இருப்பார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 

கடந்த 2003 முதல் 2008-ஆம் ஆண்டு வரை வோடபோன் நிறுவனத்தில் பணியாற்றிய  அருண், அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியிருக்கிறார் என்பதும் , இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் வோடபோன் நிறுவனத்தை விரிவாக்கி வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தியது அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ