Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிமெண்டு ஆலையில் 'மாகி' பாக்கெட்டுகள்!

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான 'மாகி' சமீபத்தில் சர்ச்சையில் பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டது. இதனை யொட்டி, ஏற்கெனவே தயார் செய்யப்பட்டு சந்தை விற்கப்பட இருந்த 'மாகி' பாக்கெட்டுகளை நெஸ்லே நிறுவனம் தொடர்ந்து திரும்பப் பெற்று வந்தது. 

 
இப்படி திரும்பப் பெற்ற 'மாகி' பாக்கெட்டுகளை எரிக்க அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் உதவியை நாடியிருக்கிறது நெஸ்லே நிறுவனம். 'மாகி' பாக்கெட்டுக்களை சிமெண்ட் ஆலையில் போட்டு எரிக்க, அம்புஜா சிமெண்ட் நிறுவனத்துக்கு ரூ.20 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
என்றாலும், எத்தனை கோடி ரூபாய் மதிப்புள்ள 'மாகி' பாக்கெட்டுகள் இப்படி எரிக்கப்பட்டன என்பதற்கான விவரத்தை நெஸ்லே நிறுவனம் வெளியிடவில்லை.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ