Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பருப்பு விலையேற்றத்தைத் தடுக்க...வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி!

உள்நாட்டில் உளுத்தம் பருப்பு பற்றாக்குறை இல்லாமல் கிடைப்பதற்கு ஏதுவாக 5,000 டன் உளுத்தம் பருப்பினை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாமா என மத்திய அரசாங்கம் பரிசிலீத்து வருகிறது.

 
எல்லா வகையான பருப்புகளின் விலையும் கடந்த சில நாட்களில் விலை உயர்ந்துள்ளன. 2014, ஜுலை முதல் 2015 ஜுன் வரையிலான ஓராண்டில் பல வகையான பருப்புகளின் உற்பத்தி ஏறக்குறைய 20 லட்சம் டன் குறைந்திருக்கும் என்று கருதப்படுகிறது. மோசமான சீதோஷ்ண நிலை நிலவியதே இந்த உற்பத்திக் குறைவுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
 
இதனை யொட்டி சந்தைகளின் பல வகையான பருப்புகளின் வரத்து குறிப்பிடத் தகுந்த அளவு குறைந்திருக்கிறது. இதனால் எல்லா வகையான பருப்புகளின் விலையும் உயர்ந்துள்ளது.  துவரம் பருப்பு ஒரு கிலோ விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. 
 
''இந்த விலையேற்றத்தைத் தடுக்க வெளிநாடுகளில் இருந்து 5,000 டன் அளவுக்கு உளுத்தம் பருப்பினை இறக்குமதி செய்யலாமா என்று யோசித்து வருகிறோம்'' என்று சொல்லி இருக்கிறார் மத்திய அரசு அதிகாரி ஒருவர்.
 
இது தவிர, 5,000 டன் துவரம் பருப்பினையும் இறக்குமதி ஏற்கெனவே டெண்டர் விடப் பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த துவரம் பருப்பு வருகிற செப்டம்பர் மாதம் சந்தைக்கு வரும் என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close