Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிஎஃப் பணத்தை எடுப்பதில் புதிய கட்டுப்பாடு!

 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் முக்கிய நோக்கம் முதுமை காலத்துக்கு தேவையான பணத்தை சேமித்து வைப்பதுதான். ஆனால் சிலர் ஓய்வு பெறுவதற்கு முன்பே வேறு சில தேவைகளுக்காகப் பிஎஃப் பணம் முழுவதையும் வெளியே எடுத்து விடுகிறார்கள். இதைத் தடுக்கும் விதமாக ஓய்வு வயதை அடைவதற்கு(58 வயதுக்கு) முன் அதிகபட்சமாக 75 சதவிகித பிஎஃப் பணத்தை எடுக்கக்கூடிய  வகையில் மாற்றம் கொண்டுவர பிஎஃப் அமைப்பு திட்டமிட்டு வருகிறது. 

தற்போது தொழிலாளர்கள் இரண்டு மாதங்களாக எங்கும் வேலை செய்யவில்லை என்ற சான்றிதழை காட்டினால் வருங்கால வைப்பு நிதியிலிருக்கும் முழுத் தொகையையும் எடுத்துக் கொள்ள முடியும் 


இந்தப் புதிய கட்டுப்பாடு சம்பந்தமான அதிகார பூர்வ அறிவிப்பு இன்னும் 10 லிருந்து 15 நாட்களுக்குள் வெளியிடப்படும் எனத் தொழிலாளர் நலத்துறை செயலாளர் ஷங்கர் அகர்வால் தெரிவித்தார் 


மேலும் இந்த வருடம் 13 மில்லியன் பிஎஃப் க்ளெய்ம் வந்துள்ளது. இதில் 6.5 மில்லியன் க்ளெய்ம் 100 சதவிகிதமும் பிஎஃ பணத்தை வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP