Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குச் சந்தையில் அதிகரித்த மியூச்சுவல் ஃபண்டுகளின் முதலீடு!

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பங்குச் சந்தையில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளது. 
 
சமீபத்தில் வெளியான ஆம்ஃபி புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மொத்தமாக ரூ.10,320 கோடி முதலீடு செய்துள்ளது. இது கடந்த 15 ஆன்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான தொகையாகும். 
 
2015 ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மொத்தம் ரூ.23,741 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்குமுன் 2000-ம் ஆண்டு இப்படி அதிக அளவிலான முதலீடு மியூச்சுவல் ஃபண்ட் துறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து தற்போது வரை 66,453 கோடி ரூபாய் ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு அதிகரித்தற்கான முக்கியக் காரணம், மார்க்கெட் குறித்த புரிதல் பொதுமக்களிடம் அதிகரித்து வருகிறது. அதனால் சந்தை சரியும்போது பணத்தை வெளியே எடுப்பது வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும், எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. 
 
சமீபத்தில் வெளியான கிரிசல் ரிப்போர்ட்டின்படி, பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 12 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஏழு காலாண்டுகளாக அதிகரித்துவரும் முதலீட்டினால், 395.51 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 12.28 லட்சம் கோடி) அளவுக்கு உயர்ந்துள்ளது.
 
இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளின் தொடர்ச்சியான முதலீடுக்கு நேரதிராக வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த இரண்டு மாதங்களாக தங்கள் முதலீட்டை வெளியே எடுத்த வண்ணம் இருக்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களிலிருந்து சுமார் 10,000 கோடி ரூபாய்க்கு முதலீட்டைத் திரும்ப எடுத்திருக்கின்றனர். கடந்த மே மாதத்தில் 3,460 கோடி ரூபாயும் ஜூன் மாதத்தில் 6,149 கோடி ரூபாய் அளவுக்கு தங்கள் முதலீட்டை திரும்ப எடுத்திருக்கின்றனர்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ