Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீனாவில்1430 நிறுவனங்களின் பங்கு வர்த்தகம் நிறுத்தம்!


சீனாவின் பங்குச் சந்தை அதிக வீழ்ச்சி அடைந்தை அடுத்து அந்த நாட்டின் பங்குச் சந்தை வர்த்தகம் ஸ்தம்பித்துள்ளது.  ஷாங்காய் சந்தை ஜூன் மாதத்தில் 25 சதவிகிதம் குறைந்துள்ளது. சீனாவின் இரண்டு பெரிய பங்குச் சந்தைகளில் 2800 நிறுவனங்களுக்கு மேல் பட்டியலிடப்பட்டுள்ளன.  இதில் ஒரே நாளில் 10%க்கு மேல்  பங்கு விலை வீழ்ச்சிக் கண்ட1430 நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்தை அந்த நிறுவனங்களே நிறுத்த பங்குச் சந்தையை கேட்டுள்ளன. இதனைஅடுத்து அந்தப் பங்குகள் மீதான வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. 

இதில் மிட் அண்ட் ஸ்மால் கேப் பங்குகள்தான் அதிகம். சீனாவின் சந்தை வீழ்ச்சி அடைவதற்கு அது அண்மைக் காலத்தில் அதிக ஏற்றம் கண்டது மற்றும் கிரீஸ் பிரச்னை நீண்டுக் கொண்டிருப்பதுதான்.

இதன் விளைவாக இந்திய பங்குச் சந்தையும் வீழ்ச்சி காண ஆரம்பித்துள்ளது. அதாவது இன்று சென்செக்ஸ் சுமார் 500 புள்ளிகள் சரிந்துள்ளன. மேலும் மெட்டல் பங்குகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ ஆகிய பங்கு விலை இன்று(08.07.2015) 6 சதவிகிதத்துக்கு மேல் குறைந்துள்ளது.
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ