Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யூபிஎஸ் பரிந்துரை: யெஸ் பேங்க் விலை குறைந்தது!

 யெஸ் பேங்கின் பங்கு விலை இன்று 7.77 சதவிகிதம் அளவுக்கு குறைந்தது. பங்குத் தரகு நிறுவனமான யூபிஎஸ் இந்த விற்க பரிந்துரை செய்ததன் விளைவாகவே, இந்த வங்கியின் பங்கு விலை குறைந்திருக்கிறது.

இன்று காலையில் ரூ.850-ல் வர்த்தகம் ஆகத் தொடங்கிய யெஸ் பேங்கின் பங்கு விலை, ரூ.795 ரூபாயில் முடிந்தது. இன்றைக்கும் மட்டும் இந்த பங்கின் விலை ரூ.67 குறைந்தது.
மிகப் பெரிய நிறுவனங்களுக்கு இந்த வங்கி அதிக அளவில் கடன் தந்திருக்கிறது. இந்தக் கடன் வாராக் கடனாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிற காரணத்தினாலேயே யெஸ் பேங்க் பங்குகளை விற்க சொல்லி பரிந்துரை செய்திருப்பதாக யூபிஎஸ் தெரிவித்துள்ளது!
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP