Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாடா மோட்டார்ஸ் பங்கு விலை: 52 வாரங்களில் இல்லாத அளவு குறைந்தது!

 டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்கு விலை இன்றைக்கு மட்டும் 5.59% அளவுக்குக் குறைந்தது. ரூ.250.45-ல் வர்த்தகமாகத் தொடங்கிய இந்த பங்கு விலை ரூ.238.35-ல் முடிந்தது. 

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்பான ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் சீனாவில் அதிக அளவில் விற்பனை ஆகிறது. ஆனால், சீனாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து குறைந்து வருவதால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை பெரிதும் பாதிப்படையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கடந்த பிப்ரவரி மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை உச்சபட்ச அளவான ரூ.600-யை எட்டியது. அப்போதிருந்து தற்போது வரை ஏறக்குறைய 33% பங்கு விலை குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது. 
 
சீனாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து குறையும்பட்சத்தில் இந்தப் பங்கின் விலையும் இறக்கத்திலேயே இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ