Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எஸ்ஸார் ஆயில் பங்கு விலை: 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது!

 எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த மூன்று தினங்களில் இந்தப் பங்கின் விலை 30 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

 

கடந்த 3-ம் தேதி இந்த பங்கு விலை ரூ.148-ஆக இருந்தது. ஆனால், ரூ.188.70-ஆக முடிந்தது. என்எஸ்இ-ல் இன்று மட்டும் 1 கோடிக்கும் அதிகமான பங்குகள் வர்த்தகமானது. 
இந்த நிறுவனம் தனது பங்கை 'டீலிஸ்ட்' செய்ய விண்ணப்பம் செய்திருந்தது. இந்த விண்ணப்பத்தை என்எஸ்இ அனுமதி அளித்ததே இந்தப் பங்கின் விலை உயர்வுக்கு காரணம். 
'டீலிஸ்ட்' காரணமாக விலை உயரும் இந்த பங்கில் சிறு முதலீட்டாளர்கள் புதிதாக முதலீடு செய்யாமல் இருப்பதே நல்லது என்கிறார்கள் பங்குச் சந்தை நிபுணர்கள்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close