Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அசிம் பிரேம்ஜி... பாதி சொத்துக்களை நன்கொடை வழங்குவதாக உறுதி!

இந்திய சாஃப்ட்வேர் நிறுவனங்களில் விப்ரோ நிறுவனத்துக்கு தனி இடம் இருக்கிறது. இந்த நிறுவனம் இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய சாஃப்ட்வேர் நிறுவனமாக திழழ்கிறது. இந்த நிறுவனத்தின் தலைவரும், இந்திய பில்லியனர்களின் ஒருவரான அசிம் பிரேம்ஜி தனது சொத்துக்களில் பாதியை அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கப்போவதாக உறிதியளித்திருக்கிறார்.

இவர் விப்ரோ நிறுவனத்தில் 73.39% பங்குகளை தனது வசம் வைத்திருக்கிறார். இதன் மதிப்பு 99,500 கோடி ரூபாய் (கடந்த மார்ச், 2015 நிலவரப்படி). இவர் வழங்க இருக்கும் நன்கொடை ஆரம்பப்பள்ளி கல்வி அடிப்படையில் வழங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ