Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருமான வரி புகார்களுக்குத் தீர்வு வேண்டுமா?

இன்கம் டாக்ஸ் ஆம்புட்ஸ்மேன்!

மாத சம்பளம் வாங்குபவர்கள், பிசினஸ் செய்பவர்கள் அனைவரும் வரி கணக்கு தாக்கல் செய்வார்கள். வரி கணக்கு தாக்கலில் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்தப் பிரச்னைகளுக்கு வருமான வரி துறையின் மூலமாகத்தான் தீர்வு தர முடியும்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது ஏற்படும் பிரச்னைகளுக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் தீர்வு அளிக்கவில்லையெனில், வருமான வரி ஆம்புட்ஸ்மேனிடம் புகார் தெரிவிக்க முடியும்.


வருமான வரி ஆம்புட்ஸ்மேன் அமைப்பு 2006-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. சென்னையிலுள்ள அலுவலகத்துக்கு வருடத்துக்கு 100 - 150 புகார்கள் வருகின்றன. இந்த அமைப்பு குறித்த விழிப்பு உணர்வு என்பது பொதுமக்களிடம் மிகவும் குறைவாகவே உள்ளது.

எதற்கெல்லாம் புகார் செய்யலாம்?

* ரீஃபண்ட் தொடர்பான புகார்கள்
* ரீஃபண்ட் காலதாமதமாகக் கிடைத்து அதற்கு வட்டி அளிக்கவில்லை என்றால்
* மேல்முறையீடு
* ரெய்டின்போது கணக்குப் புத்தகம் அல்லது சொத்து ஆவணங்களை எடுத்து வந்திருந்தால் அதைத் திரும்பக் கேட்டு.
* மத்திய நேரடி வரி வாரிய விதிமுறைகள்
* வருமான வரி அதிகாரிகள் மீதான புகார்
* வருமான வரி அலுவலர்கள் முரட்டுத்தனமாக நடந்துகொண்டால்
* வரிச் சலுகை அளிக்கும் முதலீடுகளுக்கு வரிவிலக்கு அளிக்காமல் இருப்பது
* டிடிஎஸ்
மேற்கூறிய பிரச்னைகள் அனைத்துக்கும் வருமான வரி ஆம்புட்ஸ்மேன் அமைப்பிடம் தெரிவிக்கலாம்.


எப்படிப் புகார் தெரிவிப்பது!
வரி தாக்கல் செய்பவர்களுக்கு உள்ள பிரச்னையைக் கடிதமாக எழுதி அதை வருமான வரி ஆம்புட்ஸ்மேன் அமைப்புக்கு அனுப்ப வேண்டும். இதில் மனுதாரர் கட்டாயம் கையெழுத்திட வேண்டும். கடிதத்தில் இதற்குமுன் வருமான வரி துறையின் எந்தெந்த அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளீர்கள் என்பதையும், அதற்கு அந்த அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

அதனுடன் அதற்கான ஆதாரத்தை இணைப்பது அவசியம். இந்தக் கடிதத்தில் புகார்தாரரின் பான் கார்டு எண்ணைக் குறிப்பிடுவது அவசியம்.

என்ன நடவடிக்கை எடுக்கப்படும்!
வருமான வரி ஆம்புட்ஸ்மேனுக்கு புகார் கிடைத்த உடன் அதைச் சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் அவரின் உயர் அதிகாரிக்கு, புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதுவார்கள்.

இந்த நடவடிக்கையிலே பெரும்பாலான புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனில், அடுத்த நிலை அதிகாரிக்கு அந்தப் புகார் ஆம்புட்ஸ்மேன் அலுவலகத்திலிருந்து அனுப்பப்படும்.


இதில் பெரும்பாலும் அபராதம் விதிக்கும் அதிகாரம் இல்லை. அதிகபட்சமாக ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய தொகையுடன் ஆயிரம் ரூபாய் இழப்பீடுக் கிடைக்கும்.

எப்படித் தொடர்புகொள்வது!
வருமான வரி ஆம்புட்ஸ்மேன் (தமிழ்நாடு, புதுச்சேரி)
எண். 611, 6வது மாடி,
கண்ணம்மை பில்டிங்,
அண்ணா சாலை,
சென்னை- 600 006
தொடர்புக்கு: 
044 - 8229 5486
இ-மெயில் : 
chennai-itombuds@nic.in


இரா.ரூபாவதி.


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ