Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிஎஃப் பென்ஷன் இன்ஷூரன்ஸ் கவரேஜை அதிகரிக்க திட்டம்.!

கடந்த சில வருடங்களாக தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் வருமானம் வெகுவாக அதிகரித்துள்ளது. என்பிஎஸ் முதலீட்டின் மீதான வருமானம் ஆனது 20 சதவிகிதம் வரை உள்ளது. பிஎஃப் தொகையின் வட்டி வருமானம் 8.75 சதவிகிதமாக இருக்கிறது.இதன் விளைவாகப் பிஎஃப் உறுப்பினர் எண்ணிக்கை குறையும் அபாயம் உள்ளது. இதனால் பிஎஃப் அமைப்பு உறுப்பினர்களுக்கு வழங்கும் இன்ஷூரன்ஸ் கவரேஜ் தொகையை அதிகரிக்க பரிசிலனை செய்து வருகிறது.  பிஎஃப் அமைப்பில் உறுப்பினராக இருப்பவர்கள் ஊழியர்களின் டெபாசிட்டு இணைந்த காப்பீட்டு திட்டத்தின் மூலமாகக் கவரேஜ் வழங்குகிறது. இதில் மாத சம்பளத்தைப் போல24 மடங்காக இருந்த இன்ஷூரன்ஸ் கவரேஜை 30 மடங்காக உயர்த்தி உள்ளது. 
 
ஒரு வருடத்துக்கு அதிகமாக தொடர்ந்து பணியில் இருப்பவர்கள் மரணம் அடையும் போது இந்த இன்ஷூரன்ஸில் க்ளெய்ம் செய்ய முடியும். அதாவது மாதம் ரூ. 15ஆயிரம் சம்பளம் வாங்குபவருக்கு 3.5 லட்சம் ரூபாய் கவரேஜ் தொகை கிடைக்கும். இது தற்போது 5.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பிஎஃப் கணக்கில்  தொடர்ந்து ஒரு வருடம் பணம்  செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அந்தத் தொகை ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் கவரேஜ் பெற முடியும். 
 
இந்த இன்ஷூரன்ஸ் தொகைக்கான பிரீமியமானது ஊழியர் வேலைப்பார்க்கும் நிறுவனம்தான் செலுத்தும். நிறுவனம் குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருந்தால் இந்தப் பாலிசிக்கான பிரீமியம் செலுத்த தேவையில்லை. 2014 வரும் இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியிலிருந்து 152.6 கோடி ரூபாய் க்ளெய்ம் வழங்கப்பட்டுள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ