Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தது!

 நமது அந்நிய செலாவணி கையிருப்பு  கடந்த வாரத்தில் 1.07 பில்லியன் டாலர் குறைந்து, 354.52 டாலராகக் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை 3-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில், நமது அந்நிய செலாவணி கையிருப்பு 237.5 மில்லியன் டாலர் குறைந்து, 355.52 டாலராக இருந்தது. கடந்த நான்கு வாரங்களாக நமது அந்நிய செலாவணி அதிகரித்துவந்தது. 

 

இதில் அந்நிய கரன்ஸிகளாக இருக்கும் பணத்தின் மதிப்பு மட்டும் 1.04 பில்லியன் டாலர் குறைந்து, 330.09 பில்லியன் டாலர்களாகக் குறைந்தது.

 

தங்க கையிருப்பைப் பொருத்தவரை, 24.5 மில்லியன் டாலர் அளவுக்கு குறைந்து 19.07 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ