Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சமையல் காஸ் மானியம்: அரசுக்கு மிச்சமாகும் தொகை அதிகரிப்பு!



எரிபொருளுக்கான மானியம் பெற விரும்பவில்லை என்கிற பிரச்சாரத்தை (GiveItUp Campaign)  கடந்த மார்ச் 27-ஆம் தேதி அன்று தொடங்கினார் பிரதமர் மோடி. இதனைத் தொடர்ந்து 10.16 லட்சம் பேர் வாடிக்கையாளர்கள் மானியம் பெறுவதை கோராமல் விட்டிருக்கிறார்கள். ஆனால், சமையல் காஸுக்கான மானியத்தை தொடர்ந்து பெற விரும்புகிறவர்களின் எண்ணிக்கை தற்போது 15.3 கோடியாக இருக்கிறது. 

மானியத்தை கோராதவர்களின் அதிக அளவில் உத்தரப்பிரதேசத்தில் இருக்கின்றனர். அந்த மாநிலத்திலிருந்து மட்டும் சுமார் 2 லட்சம் பேர் மானியத்தை கோராமல் விட்டிருக்கின்றனர். இதற்கடுத்தப்டியாக மகாராஷ்டரத்திலிருந்து 1.55 லட்சம் பேரும், டெல்லியிலிருந்து 1.14 லட்சம் பேரும் மானியத்தை கோராமல் விட்டிருக்கின்றனர். 

தென் மாநிலங்களைப் பொருத்தவரை, கர்நாடகாவில் 78,307 பேரும் தமிழகத்தில் 67,096 பேரும் ஆந்திராவில் 37,711 பேரும் தெலங்கானாவில் 22,645 பேரும் மானியத்தை கோராமல் விட்டிருக்கிறார்கள்.

இப்படி சுமார் 10 லட்சம் பேர் மானியத்தை கோராமல் விட்டதன் காரணமாக, ஆயில் மார்க்கெட்டிங் செய்யுன் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகி இருக்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு ரூ/134 கோடியும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ.171 கோடியும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ.169 கோடியும் பணம் மிச்சமாகியுள்ளது.


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close