Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீட்டுக் கடன்... எந்த வங்கி பெஸ்ட்?

 இரண்டு வங்கிகளில் 10 சத விகித வட்டிக்கு வீட்டுக் கடன் தருவதாகக் கூறி யிருக்கிறார்கள். நான் எந்த வங்கியைத் தேர்ந்தெடுப்பது?

எல்.சங்கமேஸ்வரன், பவானி.
மு.அ.பிரபாகரபாபு, உதவிப் பொது மேலாளர் (நிறைவு), பேங்க் ஆஃப் இந்தியா.
‘‘பொதுவாக, வீட்டுக் கடன் என்பது மத்திய அரசின் முன்னுரிமைக் கடன் திட்டம் என்பதால், ஒரு குறிப்பிட்ட வீட்டுக் கடனுக்கு, குறிப்பிட்ட காலத்துக்கு இரண்டு வங்கிகளில் ஒரே வட்டி விகிதம் வழங்குவது சாதாரணம்தான். அப்படி வீட்டுக் கடன் கிடைக்கும்போது கடனுக்கான வட்டி விகிதத்தைப் பார்ப்பதுடன், மற்ற கட்டணங்களான பிராசஸிங் ஃபீஸ், சொத்தில் ஏதும் வில்லங்கம் இருக்கிறதா என்பதைச் சொல்லும் வழக்குரைஞருக்கான கட்டணம், சொத்து மதிப்பீட்டாளர் கட்டணம், வருடாந்திரக் கட்டணங்கள்... என்று வேறு என்ன மறைமுகக் கட்டணங்கள் இருக்கின்றன என்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு கடன் வாங்குவது சிறப்பு. அதோடு, உங்களுக்கு வங்கியில் உள்ள நன்மதிப்பு, நீண்ட கால நல்லுறவு, குடும்ப நட்பு போன்றவற்றையும் கவனித்து முடிவு எடுத்தால், கடனை திருப்பிச் செலுத்தும்போது ஏதாவது பிரச்னை ஏற்பட்டாலும் வங்கியிடமிருந்து உதவி கிடைக்கும். எனவே, யோசித்து முடிவு செய்யுங்கள்.’’
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ