Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிரீஸ்: கடன் பிரச்னைக்கு தீர்வு

கடந்த சில மாதங்களாக கிரீஸ் கடனால் தத்தளித்து கொண்டிருந்தது. ஐ எம் எஃப் ( சர்வதேச நிதியம் ) உட்பட பல ஐரோப்பிய நாட்டு வங்கிகளிடம் கடன் வாங்கிய கிரீஸ் கடனை திருப்பி செலுத்த முடியாமல்  பல பொருளாதார பிரச்னைகளை சந்தித்தது .
               கீரிஸ் யூரோ நாணயத்தை உபயோகிப்பதை தடை செய்யவும் , கிரீஸை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவு செய்திருந்தன. கிரீஸ் , நாட்டின் நிதி நிலையை சமாளிக்கவும்  ,கடனை அடைக்கவும் மீண்டும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம்  கடன் கேட்டது.
        வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதால் யாரும் கடன் கொடுக்க முன்வரவில்லை . அது மட்டுமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியம் கடன் வழங்க சில நிபந்தனைகளை விதித்தது. அந்த நிபந்தனைகளை ஒட்டி கிரீஸ் நாட்டில் மக்கள் வாக்கெடுப்பும் நடந்தது. 
 
               இந்த மாதிரியான சூழலில்     கிரீஸ் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அளித்த சில வேண்டுகோள்களை முன்வைத்து 17 மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தையில் சுமூகமான தீர்வு கிடைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கிரீஸ் நாட்டின் கடன் பிரச்னைக்கு உதவுவதாக ஒரு மனதாக முடிவு செய்துள்ளனர். 
 
இது சம்பந்தமாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில்  " ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது, தீவிரமான பொருளாதார சீரமைப்புகளுடன் நிதி  உதவி அளிப்பதற்கும் எல்லா ஏற்பாடுகளும் தயாராக உள்ளது"  என்று தெரிவித்து இருக்கிறார் 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ