Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதில் சந்தேகமா... #AskNV-க்கு ட்விட் செய்யுங்கள்!

இன்று நாணயம் விகடன் ட்விட்டர் கேள்வி-பதில் பகுதியில் வருமான வரி கணக்குத் தாக்கல் தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளித்தார் ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமார்.

வருமான வரி கணக்குத்  தாக்கல் செய்ய கடைசி தேதியாக ஆகஸ்ட் 31-ம் தேதி  அறிவிக்கப்பட்டுள்ளது. வரி கணக்குத் தாக்கல் செய்ய புதிய படிவங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள இந்த நிலையில், உங்களுக்கு அதிக சந்தேகங்கள் இருக்கலாம்.

அந்தச் சந்தேகங்களுக்கு உங்களது ட்விட்டர் கணக்கிலிருந்து @nanayamvikatan உங்கள் கேள்வி #AskNV என்று ட்விட் செய்து பதில் பெறுங்கள் என அறிவித்திருந்தோம். அதன்படி வந்த கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இங்கே உங்களுக்காக...

 1. குடும்பத் தலைவியான நான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய பான் கார்டு விண்ணப்பித்து உள்ளேன்என் கணவர் எனக்கு குடும்பச் செலவுக்கு தரும் தொகையில் மிச்சப்படுத்தி மாதம் ரூ.1,000 முதலீடு செய்து வருகிறேன்நான் டாக்ஸ் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டுமா?


குடும்பத் தலைவர் மனைவிக்குத் தரும் தொகைக்கு வருமான வரி கிடையாது ( இதை pin money  என்று சொல்வோம்) இந்த   முதலீட்டின்  மூலமாக ஈட்டும் வருமானம் வருடத்துக்கு  ரூ. 2,50,000 தாண்டாதபட்சத்தில் வருமான வரி கிடையாது. ( மூத்த குடிமக்களாக இருந்தால் ரூ. 3,00,000 வரைக்கும் வருமான வரி கிடையாது )



2. ஒரு முறை ரூ. 50,000 பிரீமியம் செலுத்தி சிங்கிள் பிரீமியம் பாலிசி ஒன்றை எடுத்திருந்தேன்அதன் பாலிசி ரசீதை எங்கோ மறதியாக வைத்துவிட்டதால்,அலுவலக ஃபார்ம் 16-ல் சேர்த்து வரிச் சலுகை பெற முடியவில்லைஅந்த ரசீது இப்போது கிடைத்துள்ளதுஇதனைக் கொண்டு வருமான வரிச் சலுகை பெற முடியுமா?


வருமான வரி படிவத்தைத் தாக்கல் செய்து அதிகமாகக் கட்டிய தொகையைத் திரும்பப் பெறலாம். ஆன்லைன் மூலமாக படிவம் தாக்கல் செய்து, வங்கிக் கணக்கு எண்ணை குறிப்பிடவும். அதிகம் கட்டிய தொகை உங்கள் கணக்கில் திரும்பப் போடப்படும். 


3. மாத சம்பளக்காரர்கள் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதுஇதனைத் தாண்டி வரி கணக்குத் தாக்கல் செய்ய முடியாதா?


முடியும், மார்ச் 2016 வரை. ஆனால், அதற்கு வரி செலுத்த வேண்டியிருந்தால் வட்டியும் சேர்த்து செலுத்த வேண்டும். மேலும், இந்த வருமான வரி படிவத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் வருமான வரி படிவத்தை இரண்டாவது முறை திருத்த முடியாது. ஆகஸ்ட் 31-க்குள் வருமான வரி தாக்கல் செய்திருந்தால் மட்டுமே திருத்த முடியும் (revised return )


4. அண்மையில் வரி கணக்குத் தாக்கல் செய்வதில் அரசு சலுகைகள் அளித்துள்ளதாக என் நண்பர் ஒருவர் தெரிவித்தார். அந்தச் சலுகைகள் என்னென்ன என்பதை விளக்கி சொல்ல முடியுமா?


பெரிய சலுகைகள் எதையும் மத்திய அரசு வழங்காதது ஏமாற்றமே. வங்கி கணக்கில் இருப்பு விவரத்தை தெரிவிப்பதற்கு பதில், வங்கி கணக்கு எண்களை குறிப்பிட்டால் போதும் என குறிப்பிட்டிருப்பது ஒரு சலுகை. அடுத்து வெளிநாட்டு பயண விவரங்களுக்கு பதில் பாஸ்போர்ட் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதும் என்று குறிப்பிட்டிருப்பதாகும்.

 

5கூடுதலாகக் கட்டிய வருமான வரியைத் திரும்பப் பெற முடியுமா?


முடியும். வருமான வரி கணக்கை ஆன்லைன் மூலமாக அனுப்பவும் . வங்கிக் கணக்கையும் குறிப்பிட்டு அனுப்பவும்.


6. வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமா?


கட்டாயம் இல்லை. இருந்தால் குறிப்பிடவும் . சரியாகக் குறிப்பிட்டிருக்கும்பட்சத்தில் EVC கோடு ஜெனரேட் செய்தால் படிவத்தை பெங்களூருக்கு அனுப்ப தேவையில்லை ( CPC)).

 

7. ஒருவர் எப்போது வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்?

ஒருவருக்கு ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு அதிகமாக இருந்தால், வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். மூத்த குடிமக்கள் ரூ. 3 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் தாக்கல் செய்ய வேண்டும். 80 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மேல் இருந்தால் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.

8. எவ்வளவு வருமானத்துக்கு மேல் -ஃபைலிங் கட்டாயம்.. இ- ஃபைலிங் செய்வதால் என்ன நன்மை?


ரூ. 5 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தாலோ , ரீஃபண்ட் கேட்டு இருந்தாலோ இஃபைலிங் செய்வது கட்டாயம். இ-ஃபைலிங் செய்தால் ரீஃபண்ட் இருந்தால் விரைவில் வரும்.


9. நான் 2013-14-ம் நிதியாண்டுக்கு இன்னும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யவில்லைஇப்போது செய்ய முடியுமா?


செய்யலாம் . வருமான வரி அதிகாரி ரூ. 5000 வரை பெனால்ட்டி போடுவதற்கு வாய்ப்புண்டு. வட்டியும் உண்டு நீங்கள் வருமான வரி கட்ட வேண்டியிருந்தால் மட்டுமே. இல்லையென்றால் வட்டி வராது.

 

10. ITR-1 SAHAJ  மற்றும்   ITR-4S - SUGAM உள்ள வித்தியாசம் என்ன?

ITR-1 SAHAJ   படிவம் மாத சம்பளதாரர்களுக்கும்; ஒரு வீடு மட்டுமே வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே  பொருந்தும்.  ITR-4S - SUGAM  சிறுதொழில் செய்பவர்கள்  ஒரு கோடி ரூபாய்க்கு கீழ் விற்பனை  செய்பவர்கள்.  மேலும்  ஒரு வீடு மட்டுமே வைத்திருந்தால்  பொருந்தும் .
 
11, நான் கடந்த நான்கு வருடமாக சொந்த தொழில் செய்து வருகிறேன். ஆனால் வரி கணக்குத் தாக்கல் எதுவும் செய்யவில்லை. நான்கு வருடத்துக்கும் சேர்த்து இப்போது வரி கணக்குத் தாக்கல் செய்ய முடியுமா?

முடியாது. இரண்டு வருடங்களுக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். கணக்கில் காட்டாத வருமானம் மற்றும் சொத்துகள் இருந்தால் பெனால்ட்டி மற்றும் சிறை தண்டனை உண்டு. வருமானம் இருந்தும் , வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாமல் இருப்பது சட்டப்படி குற்றமாகும்.

12. மாத சம்பளம் வாங்கும் எனக்கு குறுகிய கால மூலதன ஆதாயம் இருக்கிறது. நான் எந்த ஐடிஆர்  படிவத்தைத் தாக்கல் செய்வது?

ஐடிஆர் 2  படிவம் தாக்கல் செய்யவும்.

13. வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது வரி சலுகை பெற்றதற்கான ஆவணங்களை இணைத்து கொடுக்க வேண்டுமா?

தேவையில்லை. ஆனால் தவறாக வரிவிலக்கு கேட்கக்கூடாது. அதிகாரி கேட்கும் பட்சத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.



விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ