Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்னாப்டீல் உடன் சிட்பி புரிந்துணர்வு ஒப்பந்தம்

   சிறு மற்றும் நடுத்தர  தொழில் நிறுவனங்கள்  (MSME)  தங்களின் விற்பனையை ஆன்லைன் வழியாக அபிவிருத்தி செய்ய ,அதன் விற்பனையாளர்களுக்கு  நிதி சம்பந்தமான உதவியை வழங்கிட  இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் முக்கிய நிறுவனமான ஸ்னாப்டீலுடன் ((snapdeal) சிட்பி ( SIDBI ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜூலை 14, 2015 இல் மும்பையிலிருக்கும் சிட்பியின் அலுவலகத்தில்  சிட்பியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் கே சத்ரபதி சிவாஜியும் ஸ்னாப்டீலின் தலைமை செயல் அதிகாரி   குணால் பாலும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 
  
 
              ஆன்லைன் வர்த்தகம் இந்தியாவில் மிகவேகமாக வளர்ந்து வரும் துறையாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம்  சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களின் வியாபாரத்தை விரிவாக்க  ஸ்னாப்டீல் பெரிய அடித்தளமாக இருக்கும்   
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ