Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திறன் இந்தியா திட்டம்

 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புது டெல்லியில் ஜூலை 15. 2015 ல் திறன் இந்தியா திட்டத்தை துவக்கி வைத்தார். இந்தியாவில் நிலவுகின்ற வறுமைக்கு எதிராக போர் தொடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக திறன் இந்தியா திட்டம் துவங்கப்பட்டுள்ளது. திட்டத்தை துவக்கி வைத்து மோடி பேசினார்.


சீனா உலகத்தின் பொருட்களின் உற்பத்தி தலைநகராக விளங்குகிறது என்றால், இந்தியா இந்த உலகின் மனித வளத்தின் தலைநகராக மாற வேண்டியிருக்கிறது. இந்த இலக்கை நோக்கமாக கொண்டு நாம் செயல்பட வேண்டும் .


இந்தியா மனித வளம் நிறைந்த நாடு. இந்திய இளைஞர்கள் வெறுமனே மகிழ்ச்சியுடன் மட்டும் வாழாமல் , பெருமையுடனும் கண்ணியத்துடனும் வாழ வேண்டும். அவர்களிடையே மகத்தான திறமைகள் இருக்கிறது. அந்த திறமைகளை வெளிப்படுத்த சரியான வாய்ப்புகள் தான் வேண்டும் .அந்த வாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டும் 


வறுமைக்கு எதிரான போரில் ஒவ்வொரு ஏழை இளைஞனும் ஒரு போர் வீரனாக இருந்து செயல் பட வேண்டும் 


நம்முடைய உலகமும், தொழில்நுட்பமும் வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் நாம் என்ன செய்ய போகிறோம் என்ற திட்டமிடலும் அது குறித்த பார்வையும் நமக்கு தேவையாக இருக்கிறது. நம்முடைய திறன்களை கூர்மையாக்கினால் 4 லிருந்து 5 கோடி வரையிலான மனித சக்தியை இந்த உலகிற்கு நம்மால் தர முடியும். 


உலகம் முழுவதும் திறமையான மனித சக்திக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது .இதை மனதில் வைத்து இதற்கு ஏற்ற மாதிரி நம் இளைஞர்களை தயார் செய்ய வேண்டும் 


என்று மேலும் அவர் பேசினார் 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP