Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் இறக்குமதி குறைவு!

தங்கம் இறக்குமதி செய்வது ஜூன் மாதத்தில் 37 சதவிகிதம் குறைந்துள்ளது. இதன் மதிப்பு 1.96 பில்லியன் டாலர் ஆகும். 2014ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 3.12 பில்லியன் டாலராக இருந்தது. இது 2015 மே மாதத்தில் 2.42 பில்லியன் டாலராக இருந்தது. தங்கத்தின் இறக்குமதி தொடர்ந்து குறைவதால் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் வெகுவாகக் குறைந்து வருகிறது. 
இதனால் வர்த்தகப் பற்றாக்குறையும் குறைந்து வருகிறது. அதாவது கடந்த 2014ம் வருடம் ஜூன் மாதம் 11.76 பில்லியன் டாலராக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை 10.82 பில்லியன் டாலராகக் குறைந்திருக்கிறது. 
இந்தியாவில் அதிகமாக இறக்குமதி செய்யப்படுவது தங்கம்தான். ஏனெனில் இங்குத் தங்க நகை அணிவதை கெளரவம் சார்ந்த விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ