Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுற்றுலா: வெளிநாட்டினர் வருகை 9 மடங்கு அதிகரிப்பு!

மத்திய சுற்றுலா துறை அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின் படி, நடப்பு 2105-ம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இ-விசா வசதியின் மூலம் இந்தியாவுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளது தெரிய வந்திருக்கிறது.

இந்திய சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், இந்திய சுற்றுலாத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகிறது. கடந்த 2014 நவம்பரில் ஆன்லைனில் விசா பெறும் முறையை அறிமுகம் செய்தது. இதனாலேயே தற்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ஆன்லைன் மூலம் விசா பெற்று 15,557 வெளிநாட்டினர் இந்தியாவுக்கு சுற்றுலாவுக்காக வந்திருக்கிறார்கள். இதில் அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், மெக்ஸிகோ, ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா, கொரியா, பிரான்சு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ