Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2016-ல் அரிசி ஏற்றுமதி 20% குறையும்!

அரிசி, நம் நாட்டின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக விழங்குகிறது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும் அரிசி உணவுகளை விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். இதனால் இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதி தற்போது நன்றாக காணப்படுகிறது. ஆனால் வருகிற 2016-ம் ஆண்டில் அரிசி ஏற்றுமதி 20% குறையும் என ஐ.நா.சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தனது சமீபத்திய அறிக்கையில் சொல்லியிருக்கிறது.

அரிசி உற்பத்தியில் முதல் இடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் இருந்து வருகிறது. நடப்பு 2015-ம் ஆண்டில் சர்வதேச அளவில் அரிசி உற்பத்தி 49.93 கோடி டன்னாக இருக்கும் என்றும், இதில் இந்தியாவின் பங்கு 10.35 கோடி டன்னாக இருக்கும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

நடப்பு ஆண்டில் ஒரு கோடி டன் அரிசி ஏற்றுமதியாகும் எனவும், அடுத்த ஆண்டு இதிலிருந்து 20% குறைந்து ஏற்றுமதியாகும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி குறைவதற்கு மிக முக்கிய காரணம், அரிசியின் உள்நாட்டு தேவை அதிகரித்து காணப்படுவதே. இந்திய அரிசி ஏற்றுமதி குறையும் சமயத்தில், தாய்லாந்து மற்றுக் வியட்நாம் நாடுகளின் அரிசி ஏற்றுமதி அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close