Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ப்யூச்சர் அண்ட் ஆப்ஷன் - 3

- எம்.பி. பாண்டிகுமார், இணை பேராசிரியர், LIBA

கடந்த அத்தியாயத்தில் நான்கு வகையான ஃப்யூச்சர் காண்ட்ராக்ட் வகைகள் பற்றி சொன்னேன்.

பங்கு ஃப்யூச்சர் காண்ட்ராக்ட் அல்லது ஸ்டாக் ஃப்யூச்சர்ஸ் காண்ட்ராக்ட் (Stock futures),

பங்கு சந்தை குறியீட்டேன் ஃப்யூச்சர்ஸ் காண்ட்ராக்ட் அல்லது இன்டெக்ஸ் ஃப்யூச்சர்ஸ் காண்ட்ராக்ட் (Index futures),

கடன் பத்திரங்கள் ஃப்யூச்சர் காண்ட்ராக்ட் அல்லது பாண்ட் ஃப்யூச்சர்ஸ் காண்ட்ராக்ட் (Bond futures),  

அந்நிய செலவாணி ஃப்யூச்சர் காண்ட்ராக்ட் அல்லது கரன்சி ஃப்யூச்சர்ஸ் காண்ட்ராக்ட் (Currency futures).

இந்த ஃப்யூச்சர்ஸ் கான்ட்ராக்ட்டுகளை விற்பவர் மற்றும் வாங்குபவருக்கிடையில் எக்ஸ்சேஞ்சானது எப்படி வரையறை செய்து செயல்படுத்துகிறது? என்பதை இப்போது பார்ப்போம்.


குறிப்பிட்ட அடிப்படை சொத்து:
ஃப்யூச்சர் காண்ட்ராக்ட் எதை எடுத்து கொண்டாலும் அதற்குரிய அடிப்படை சொத்து என்ன என்பதை மிக தெளிவாக எக்ஸ்சேஞ்சின் வரையரைகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம். உதாரணமாக, கோல்ட் கமாடிட்டி ஃப்யூச்சர் காண்ட்ராக்ட்களில், எம்சிஎக்ஸ்(MCX) அதனுடைய தர நிர்ணயத்தில் தங்கமானது 995 தூய்மையாக இருப்பது மட்டுமல்லாமல், லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன் வரையறுத்த (LBMA) அல்லது எக்ஸ்சேஞ்ச் வரையறுத்த சப்ளையரிடம் பெற்று அதற்கான தர சான்றிதளை சேர்த்து சமர்பித்தல் கட்டாயம் என்கிறது.


குறிப்பிட்ட எண்ணிக்கை அல்லது அளவு:
எந்தவொரு ஃப்யூச்சர் காண்ட்ராக்ட்டும் அடிப்படை சொத்துகளை (Underlying Assets) குறிப்பிட்ட / வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் வாங்க / விற்க நிர்ணயம் செய்கிறது.

உதாரணமாக, எம்சிஎக்ஸ் கோல்ட் கமாடிட்டி ஃப்யூச்சர்-ல் காண்ட்ராக்ட்டுக்கான வர்த்தகம் பின் வரும்  அடிப்படை அளவுகளில் அல்லது  ட்ரேடிங் லாட்டுகளில்   1 கி.கி/100 கிராம் /8  கிராம் /1 கிராம் இருக்கிறது. இந்நிலையில்  அவை அனைத்துக்கும் உச்ச அளவு/வரம்பு  10 கி.கி என்பதாகும்.

அதாவது, காண்ட்ராக்ட்டின்படி, விற்பவர் இறுதி தீர்வு நாளன்று (Final Settlement) 1 கி கி தங்கத்தை வாங்குபவருக்குக் குறிப்பிட்ட விலையில் விற்கிறார்.  எம்சிஎக்ஸ் (MCX) ல்  கோல்ட் உலோகத்தில் மட்டும் பல்வேறு வகையான காண்ட்ராக்ட்கள் இருப்பது யாவரும் அறிந்ததே.

கீழ்வரும் அட்டவணை மூலம் குறைந்த மற்றும் அதிக பட்ச ட்ரேடிங் அல்லது மார்க்கெட் லாட் என்ன என்பதை பார்ப்போம்.


 

வரிசை  

 

எண்

கோல்ட் 

 

காண்ட்ராக்ட்கள்

டிரேடிங் லாட்

அதிகபட்ச  ஆர்டர் அளவு

1

கோல்ட்

 

1.கி.கி

 

10 கி.கி

2

 

கோல்ட் கினியா

 

8 கிராம்

 

10 கி.கி

3

 

கோல்ட் எம்

 

(Gold M)

 

100 கிராம்

 

10 கி.கி

4

 

கோல்ட் பீடல்

 

(Gold Petal)

 

1 கிராம்

 

10 கி.கி

5

 

கோல்ட் பீடல்- 

 

நியு டெல்லி 

 

(Gold Petal-New Delhi)

 

1 கிராம்

 

10 கி.கி

 

 

எம்சிஎக்ஸ்-ல் மார்க்கெட் குறிப்பிட்ட எண்ணிக்கை அல்லது அளவை அறிய) பின் வரும் இணையதள முகவரியை பயன்படுத்த வேண்டுகிறேன்:

(http://www.mcxindia.com/Uploads/Product/3/Gold%20February%202015%20Contract%20Onwards.pdf )

ஸ்டாக் ஃப்யூச்சர் காண்ட்ராக்ட்டில் எப்படி ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் குறிப்பிட்ட எண்ணிக்கையை வரையறுக்கிறது?

உதாரணமாக, சுந்தர் என்பவர் எஸ்பிஐ-யின் 1250 பங்குகளை ஜூலை  மாத இறுதியில் வாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். அத்தகையான முடிவு எதிர்கால விலையின் போக்கினை தீர்மானிப்பது கடினம் என்பதால், சுந்தர் ஜூலை  மாத ஃப்யூச்சர் காண்ட்ராக்ட்டில் எஸ்பிஐ பங்குகளை நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மூலம்  வாங்குவதற்கு முடிவு செய்கிறார்.

அவ்வாறு செய்கையில், எக்ஸ்சேஞ்சின் வரையறுக்கப்பட்ட எஸ்பிஐ ஃப்யூச்சர் காண்ட்ராக்ட்டின் எண்ணிக்கையானது 1250 ஆதலால், சுந்தர் ஒரு ஜூலை மாத காண்ட்ராக்ட்டை வாங்குகிறார்.


ஸ்டாக் ஃப்யூச்சர் காண்ட்ராக்டில் குறிப்பிட்ட அளவு அல்லது எண்ணிக்கையை (Market lot) கீழே எடுத்துக்காட்டப்பட்டுள்ள உதாரணத்திலிருந்து அறியலாம்.

நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்-SBI ஸ்டாக் ஃப்யூச்சர்ஸ்

பதிவிறக்கம்: நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இணையத்தளம்

 குறிப்பிட்ட கால வரையறை: காண்ட்ராக்ட்டின் ட்ரேடிங் சைக்கிள்

எந்தவொரு பியுச்சர்ஸ் காண்ட்ராக்ட்டானாலும், பைனல் செட்ல்மென்ட்(இறுதி தீர்வு-Final Settlement)  எக்ஸ்சேஞ்சால் வரையறுக்கப்பட்டதாகும்.

குறிப்பிட்ட கால வரையறை என்பது ஒவ்வொரு எக்ஸ்சேஞ்சும் பியுச்சர்ஸ் காண்ட்ராக்ட் முதிர்வு கால தேதியை வெளியிடுகிறது. முதிர்வு கால தேதியன்று காண்ட்ராக்ட்டிற்கான வர்த்தகம் வாங்குபவர் மற்றும் விற்பவர்கிடையில் எக்ஸ்சேஞ்சால் முடித்து பின்னர் அதற்கான பரிவர்த்தனைகளை வர்த்தகம் நடந்த மறு நாளில் (T+1)  தீர்த்து வைக்கிறது.

கீழ் வரும் இரண்டு உதாரணங்களின் மூலமாக குறிப்பிட்ட காலவரையறையை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

 முதலில் உதாரணமாக MCX எவ்வாறு (மல்டிப்பிள் கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்) குறிப்பிட்ட கால வரையறையை அதாவது முதிர்வு கால தேதியை கையாளுகிறது என்பதை கோல்ட்/கோல்ட்-எம்/கோல்ட் பீடல் கமாடிட்டி பியுச்சர்ஸ் காண்ட்ராக்ட்களின் வாயிலாக தெரிந்து கொள்வோம்.


பதிவிறக்கம்:MCX இணையத்தளம்

எம்சிஎக்ஸ் கோல்ட்-எம் கமாடிட்டி ஃப்யூச்சர்-கால வரையறை



 பதிவிறக்கம்:MCX இணையத்தளம்


எம்சிஎக்ஸ் கோல்ட்-பீடல் கமாடிட்டி ஃப்யூச்சர்-கால வரையறை

 


பதிவிறக்கம்:MCX இணையத்தளம்


மேலே காட்டப்பட்டுள்ள எடுத்துகாட்டின் மூலம் MCX ஆனது தற்பொழுது அதனுடைய கால அட்டவணையில் மூன்று வெவ்வேறு முதிர்வு தேதியிட்ட  கோல்ட் கமாடிட்டி பியுச்சர்ஸ் காண்ட்ராக்ட்களை வர்த்தக பயன்பாட்டிற்காக வடிவமைத்துள்ளது, என்பதை நன்கு அறிந்து கொள்ளலாம்...அவை பின் வருமாறு.

 





 

 

 

 

மல்டிப்பிள் 

கமாடிட்டி 

எக்ஸ்சேஞ்ச்

முதிர்வு தேதியிட்ட 

கோல்ட் காண்ட்ராக்ட்கள்

விளக்கம் 

கோல்ட்

கோல்ட் எம்

கோல்ட் பீடல்

 

05 ஜூன் 

2015

5 ஆகஸ்ட்,

2015

31 ஜூலை, 

2015

கூடிய 

விரைவில் 

முதிர்வு 

எட்டக்க்கூடிய 

காண்ட்ராக்ட்

(Near

 month contract)

05 ஆகஸ்ட் 

2015

4  செப்டம்பர்

, 2015

31 ஆகஸ்ட்

2015

இடைப்பட்ட 

முதிர்வுகால 

காண்ட்ராக்ட்

(Mid month contract)

05 அக்டோபர் 

2015

5 அக்டோபர்,

 2015

30  செப்டம்பர், 

2015 மற்றும் 30 அக்டோபர் 2015

 

 

அதிக / 

நீண்ட முதிர்வு 

அவகாசமுள்ள 

காண்ட்ராக்ட்

(Far month contract) 

இரண்டாவதாக NSE(நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்(NSE) குறிப்பிட்ட கால வரையறையை அதாவது முதிர்வு கால தேதியை எவ்வாறு கையாளுகிறது என்பதை எஸ் பி ஐ (SBI) ஸ்டாக் பியுச்சர்ஸ் காண்ட்ராக்ட்டின் வாயிலாக தெரிந்து கொள்வோம்.

 

 

நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்-SBI ஸ்டாக் ஃப்யூச்சர்ஸ்

 


பதிவிறக்கம்: நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இணையத்தளம்

 

மேலே எடுத்துகாட்டபட்டுள்ள உதாரணத்தின் வாயிலாக எஸ் பி ஐ (SBI) ஸ்டாக் பியுச்சர்ஸ் காண்ட்ராக்ட்டானது மூன்று வெவ்வேறு முதிர்வு தேதிகளில் NSE இன் பைனல் செட்ல்மேன்ட்க்காக அதன் கால அட்டவணையில் வர்த்தக பயன்பாட்டிற்காக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

 







நேஷனல் 

ஸ்டாக் 

எக்ஸ்சேஞ்ச்

முதிர்வு தேதியிட்ட 

கோல்ட் காண்ட்ராக்ட்கள்

விளக்கம் 

30 ஜூலை,

2015

கூடிய விரைவில் 

முதிர்வு 

எட்டக்க்கூடிய 

காண்ட்ராக்ட்

(Near month contract)

27 ஆகஸ்ட்,

2015

இடைப்பட்ட 

முதிர்வுகால 

காண்ட்ராக்ட்

(Mid month contract)

24  செப்டம்பர்,2015

அதிக/நீண்ட 

முதிர்வு 

அவகாசமுள்ள 

காண்ட்ராக்ட் 

(Far month contract) 


ஆப்ஷன் கான்ட்ராக்ட்!


இதுவரை நாம், ஃப்யூச்சர்ஸ் பற்றி பார்த்தோம். இனி ஆப்ஷன் பற்றி பார்ப்போம். ஆப்ஷன் என்றால் என்ன?


ஆப்ஷன் காண்ட்ராக்ட்டிற்கு மற்றொரு பெயர் அழைப்புரிமை எக்ஸ்சேஞ்ச் முன்னோக்கிய ஒப்பந்தம் (Option Contract) என்பதாகும். ஆப்ஷன் காண்ட்ராக்ட்டானது எக்ஸ்சேஞ்சால் நிர்வகிக்கபடுகிற மற்றொரு முன்னோக்கிய ஒப்பந்தமாகும்.

 

நாம் ஏற்கெனவே பார்த்த ரயில்வே மற்றும் பஸ் முன்பதிவு/ரிசர்வேஷன் என்பது ஆப்ஷன் காண்ட்ராக்ட்டுக்கு சிறந்த உதாரணமாகும். இவற்றில் ரிசர்வேஷன் என்பது பயணம் செய்யும் முன் பணம் செலுத்தி உரிமையை பெறுவது. எவ்வாறு பயணம் திட்டமிட்டப்படி நடக்கவில்லையோ அப்போது நாம் பயண சீட்டை ரத்து செய்வது வழக்கம்.

 

அவ்வாறு ரத்து செய்யும்போது, பயணம் செய்யும் உரிமையை இழக்கமுன் வருகிறோம். அந்தத் தருணத்தில், ரயில்வே மற்றும் பஸ் நிர்வாகம் வசூல் செய்த முன்பதிவுக்கான உரிமை பணத்தை பிடித்து கொண்டு மீதமுள்ள பயண சீட்டுக்கான தொகையை திரும்ப கொடுத்துவிடுகிறது.


ஆப்ஷன் காண்ட்ராக்ட் என்பது குறிப்பிட்ட பொருளை, குறிப்பிட்ட விலையில், குறிப்பிட்ட தேதியில்  வாங்க மற்றும் விற்பதற்கான உரிமையை முன்பணம் செலுத்தி, வாங்குபவரால் விற்பவருடன் எக்ஸ்சேஞ்சால் செய்யப்படும் ஒப்பந்தமாகும்.

 

இந்த வகையான ஒப்பந்தத்தில் வாங்குபவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால், கடமை அல்லது கட்டாயம் என்பது இல்லை.
இதற்கொரு உதாரணம் சொல்கிறேன்.


கண்ணன் என்பவர் 1250 பங்குகளை ரூ.285 (ஒரு பங்கின் விலை) ஆகஸ்டு மாதத்தில் வாங்கவேண்டும் என்று முடிவு செய்கிறார். ஆனால், திடீரென அந்தப் பங்கின் விலை ஏறிவிடுமோ என்று பயப்படுகிறார்.

 

எனவே, ஆப்ஷன் கான்ட்ராக்ட்டின் மூலம் விலை உயர்வதினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள நினைக்கிறார். என்எஸ்இ மூலமாக ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி முதிர்ச்சி பெறும் ஸ்டாக் ஆப்ஷனின் வாயிலாக 1250 பங்குகளை ரூ.285 (ஒரு பங்கு விலை) வாங்க, விற்பவரிடம் வாங்கும் உரிமையை பெற ஒப்பந்தமிடுகிறார்.

 

இந்த வாங்கும் உரிமை பெறுதவற்காக  ரூ .1 அல்லது Re.1  பிரிமீயத்தையும் செலுத்துகிறார்.  இப்படி செய்வதினால் இரண்டு விதங்களில் எதிர்கால விளைவுகள் அமைய வாய்ப்புள்ளது.


நிலை : 1 (இறுதி விலை ரூ.280)


ஆகஸ்ட் 27-ம் தேதி அன்று, எஸ்பிஐ பங்கின் விலையானது என்எஸ்இ-ன் கேஷ் (Cash) மார்க்கெட்டில் ரூ.280 என்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில், கண்ணன் தன்னுடைய ஆப்ஷன் காண்ட்ராக்ட் சாதகமாக இல்லை என்று கருதுகிறார். கண்ணன் அவ்வாறு கருதுவதற்கு என்னவாக இருக்கும்?


கண்ணன் அவர்கள் ஆப்சன் ஒப்பந்தத்தை பயன்படுத்தி SBI பங்குகளை வாங்குகிறார் என்றால் அவர் சந்தை விலையை காட்டிலும் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டும், அதாவது ரூ 280 க்கு பதிலாக ரூ.285 கொடுத்து ஆப்சன் மூலம் வாங்குவதாகும். அப்படி அவர் செய்தாரென்றால் அது முதலீடு கோட்பாடுகளுக்கு புறம்பானதாகும்.


உலகளவில் அனைவராலும் ஏற்றுகொண்ட முதன்மையான  முதலீடு  கோட்பாடு குறைந்த விலையில் வாங்கி அதிக விலையில் விற்றல்” . இப்படியிருக்கையில் ஆப்சன் காண்ட்ராக்ட் பயனற்றதாகும். அதனால் அவர் கட்டிய முன்பணம் ரூ.1250 பிரிமீயத்தை இழக்க தயாராகி பங்குகளை கேஷ் மார்க்கெட்டில் லாபம் என்பதால் வாங்குகிறார். இறுதியில் ஆப்ஷன் உபயோகப்படுத்தாததால் ,கண்ணன் அவர்களுக்கு ரூ 1250 நஷ்டம் ஏற்படுகிறது.

நிலை : 2 (இறுதி விலை ரூ.290)


ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி அன்று எஸ்பிஐ பங்கின் விலையானது என்எஸ்இ-ன் கேஷ் மார்க்கெட்டில் ரூ.290 என்று இருக்கிறது. கண்ணன் எது நடக்கக்கூடாது என்று நினைத்தாரோ அது நடந்துவிட்டது.

 

இந்த நிலையில் கண்ணன் தன்னுடைய ஆப்ஷன் காண்ட்ராக்ட் தனக்கு சாதகமாக இருப்பதினால், அவருடைய வாங்கும் உரிமையை விற்பவரிடம் செலுத்தி (excercise), ரூ.285-க்கு ஓரு பங்கு என்கிற கணக்கில் வாங்குகிறார்.

 

இதன் மூலம் அவருக்கு கிடைக்கும் மொத்த லாபம் ரூ.6250. இதில் பிரீமியகாக செலுத்திய ரூ.1250-யைக் கழித்தால், அவருக்குக் கிடைக்கும் நிகர லாபம் ரூ.5,000.


ஆப்ஷன் காண்ட்ராக்ட்களை பொதுவாக  பின் வரும் வகைகளாக பிரிக்கலாம்.


1.    ஸ்டாக் ஆப்ஷன் காண்ட்ராக்ட்(Stock option)

2.    இன்டெக்ஸ் ஆப்ஷன் காண்ட்ராக்ட்(Index option)
3.    கர்னசி ஆப்ஷன் காண்ட்ராக்ட்(Currency option)


நிதி பியுச்சர்ஸ் காண்ட்ராக்ட்களை போலவே  குறிப்பிட்ட அடிப்படை சொத்தின் வாயிலாக மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையில்  எக்ஸ்சேஞ்சால், ஆப்ஷன் காண்ட்ராக்ட்களை உருவாக்கபடுகிறது.


அடுத்ததாக டெரிவேட்டிவ் காண்ட்ராக்ட்டிற்கான ரிஸ்க் என்ன என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போம். ஏன் மற்றும் எதற்காக டெரிவேட்டின் ரிஸ்கை தெரிந்து கொள்ள வேண்டும் ? எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?

 

 

- இன்னும் தெரிந்து கொள்வோம்

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ