Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்பிஎஸ்: இடையில் பணம் எடுக்க முடியுமா?

 நேஷனல் பென்ஷன் சிஸ்டத்தில் (NPS), இடையில் எப்போதெல்லாம் பணம் எடுக்க முடியும்?

சரவண பாலாஜி, சென்னை.
சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர்.
“சமீபத்தில் என்பிஎஸ் திட்டத் திலிருந்து வெளியேற மற்றும் பணத்தைத் திரும்பப் பெறும் விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விதிமுறையின்படி, என்பிஎஸ் கணக்குத் தொடங்கிய நாளிலிருந்து பத்து வருடங்கள் வரை சந்தாதாரர்கள் பணத்தை எடுக்க முடியாது. தவிர, அறுபது வயதுக்குள், மொத்த தொகையில் 25 சதவிகித தொகையை மட்டுமே இடையில் எடுக்க முடியும்.
ஆனால், இந்த முதலீட்டில் ஒரு பகுதி பணத்தை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் ரூ.3 லட்சம் முதலீடு செய்திருந்தால், அதிகபட்சம் ரூ.75,000 வரைக்கும் எடுத்துக் கொள்ள முடியும். குழந்தைகளின் கல்வி, திருமணம், வீடு கட்டுவதற்கு, நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு என்பதுபோன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பணத்தை எடுக்க என்பிஎஸ் திட்டம் அனுமதி தருகிறது.
இதுதவிர, ஒரு குறிப்பிட்ட இடைவெளியில்தான் பணத்தை எடுக்க முடியும். பணத்தை எடுக்கும் போது, ஐந்து ஆண்டு கால இடைவெளி இருப்பது அவசியம்.  நோய்களுக்குச் சிகிச்சை பெற மட்டும் எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.”
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ