Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மனைவி செலுத்து இன்ஷூரன்ஸ் பிரீமியத்துக்கு கணவன் வரி விலக்கு பெற முடியுமா?

என் பெயரில்  ஆயுள்  காப்பீடு பாலிசியை எடுத்திருக்கிறேன். என் அப்பாவை நாமினியாக நியமித்திருக்கிறேன். பிரீமியம் செலுத்துகிறேன். என் கணவருக்கு 80சி அடிப்படையில் வரிவிலக்கு கிடைக்குமா?

எஸ்.தனலட்சுமி.
கே.ஆர்.சத்தியநாராயணன், ஆடிட்டர்.
“நீங்கள் பிரீமியம் கட்டுவதால், உங்களின் கணவருக்கு 80சி அடிப்படையில் வரிச்சலுகை கிடைக்காது. பொதுவாக, சார்ந்திருக்கும் துணை (கணவன்/மனைவி,), பிள்ளைகளுக்கு ஆயுள் காப்பீடு பாலிசிக்காக பிரீமியம் கட்டினால், யார் பிரீமியம் கட்டுகிறாரோ அவருக்கு வரிவிலக்கு அளிக்கப்படும். இங்கே, கணவர் யாரையும் சார்ந்து இல்லாமல் தனியாக வருமானம் ஈட்டுபவராக இருக்கிறார் என்பதாலும், பாலிசி பிரீமியத்தை அவர் கட்டவில்லை என்பதாலும் நிச்சயமாக அவருக்கு வரிச் சலுகை கிடைக்காது.”
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ