Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பங்கின் முடிவு விலை வித்தியாசப்படுவது ஏன்?

 ஐடியா நிறுவனப் பங்கு கடந்த 28.05.15 அன்று சந்தை முடியும் நேரத்தில், அதாவது, பிற்பகல் 3.30 மணிக்கு ரூ.170.20-170.90 என்ற விலையில் வர்த்தகமானது. ஆனால், அன்றைய முடிவு விலை ரூ.169.20 என நிர்ணயிக்கப் பட்டது. இதுபோல பல பங்குகளில் நடக்கிறது. ஒரு பங்கின் முடிவு விலை யாரால் அல்லது எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது?

கே.மகேஷ், பண்ருட்டி.
எம்.எஸ்.ஓ. அண்ணாமலை, பங்கு தரகர், சேலம்.
“பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ  சந்தைகளில் வர்த்தகமாகும் எல்லா பங்குகளின் முடிவு விலையும் கடைசி 15 முதல் 20 நிமிடங்களில் தீர்மானிக்கப்படுகிறது. 3.10 / 3.15 - 3.30 மணி வரையில் வர்த்தகமாகும் பங்குகளின் சராசரி விலை, முடிவு விலையாகக் கணக்கிடப்படுகிறது.
கடைசி நிமிடத்தில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்களைத் தவிர்க்கவே இப்படி ஒரு ஏற்பாடு. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகளும் இதன் அடிப்படையில்தான் கணக்கிடப் படுகிறது.”
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close