Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

5 வருடங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை சரிவு!

22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56 குறைந்து ஒரு சவரன் ரூ. 19472 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 2434 ஆக உள்ளது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 26030 ஆக உள்ளது.கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை சரிந்துள்ளது.  சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1130 டாலராக உள்ளது. இந்த விலையில் 2010ம் ஆண்டு வர்த்தகம் ஆனாது. 
2013ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் ஃபெடரல் வங்கி விரைவில் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற அறிவிப்பது வெளியாகி உள்ளது. இது மட்டும் இல்லாமல் டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருவதாலும் தங்கத்தின் விலை சரிந்து வருகிறது. 
வெள்ளியின் விலையும் சரிவடைந்து வருகிறது. ஒரு அவுன்ஸ் வெள்ளி சர்வதேச சந்தையில் 14.91 டாலருக்கு வர்த்தகமாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது கிலோவுக்கு ரூ. 115 குறைந்து, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 34,155க்கு விற்பனையாகிறது.  ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 36.50க்கு விற்பனையாகிறது. 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close