Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாணயம் விகடன், ஐசிஐசிஐ புரு.மியூச்சுவல் ஃபண்ட்: வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு கூட்டம்

 வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு !

நாணயம் விகடன் மற்றும் ஐசிஐசிஐ புருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்திய ‘வளமான  வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு’ - முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வுக் கூட்டம் சென்னையில் ஜூலை 19, 2015 இல்  நடந்தது. 
 
 
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட   ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தெற்கு மற்றும் கிழக்கு மணடலத் தலைவர் அனிருத்தா சௌத்ரி,  தன் வாழ்க்கை  அனுபவத்துடன் முதலீட்டின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார்.  முதலீட்டை பற்றி பேசும் போது வாரன் பஃபெட் -ன் முக்கியமான ஆலோசனைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டது வந்திருந்த எல்லோருக்கும் பயனுள்ளதாக அமைந்தது 
 
         அவரைத் தொடர்ந்து  ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ரீஜினல் ஹெட் ஹரீஷ் பேசும் போது, கூட்டத்துக்கு வந்திருந்தவர் ஒவ்வொரும் எதில் எதில் முதலீடு செய்து இருக்கிறீர்கள் என்று கணக்கிட சொன்னார். பெரும்பாலானவர்கள் ரியல் எஸ்டேட் துறையிலும், தங்கத்திலும் முதலீடும் செய்து இருக்கின்றனர். ஏன் நாம் ஈக்விட்டியில் அதிகம் முதலீடு செய்யவில்லை என்ற கேள்வியை முன் வைத்து மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மை, வருமானம் பற்றி  புள்ளி விவரங்களை குறிப்பிட்டு  உரையாற்றினார். 
 
அவரைத் தொடர்ந்து மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன், மற்ற துறைகளில் முதலீடு செய்வதைக்காட்டிலும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் எந்த அளவுக்கு நன்மை பயக்கும் என்பதை விளக்கினார். உலகின் தலை சிறந்த பலகலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வர்டு பலகலைக்கழகம் கூட ஈக்விட்டி ஃபண்டுகளில் தான் அதிகமாக முதலீடு செய்து இருக்கிறது  என்றார். 
 
 இந்தியா வளர்ந்து வரும் நாடு. இதுதான் முதலீடு செய்ய சரியான தருணம் , இந்த சமயத்தில் முதலீடு செய்ய தவறினோம் என்றால் நமக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை இழக்கிறோம் என்று அர்த்தம் என்றார். 
எங்கே அதிக லாபம் தருகிறோம் என்று உத்திரவாதம் தருகிறார்களோ அங்கே பிரச்னை இருக்கிறது . மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்  என்றும் , மக்கள் அதிக லாபம் தரும் என்று ஈமு கோழி போன்ற போன்ஸி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாந்து போவதை விட மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எவ்வளவு பாதுகாப்பானது என்றும் அதிலுள்ள  சிறப்புகளை குறித்தும் எளிமையாக விளக்கினார். 
 
கூட்டத்தின் இறுதியில் முதலீட்டாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு நிபுணர்கள் விரிவான விளக்கம் தந்தனர்.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ