Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மழைக்காலத்தில் கார் பராமரிப்பு..!

 - விஜய் குமார்,   தலைமை தொழில்நுட்ப அதிகாரி,

மோட்டார் இன்ஷூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ்

 மழைக் காலங்களில் கார்களுக்கு பிரச்னைகள் ஏற்படுவது இயல்பானது தான். மழை நீர் தேங்கி நிற்கும் சாலைகளில் வாகனங்கள் ஸ்தம்பித்து போவது, காலையில் வாகனத்தை எடுக்கும் போது உண்டாகும் ஸ்டார்ட்டிங் பிரச்னைகள் மற்றும் என்ஜினில் ஏற்படும் பாதிப்புகள் , அவசரமாக கிளம்பி சென்று கொண்டிருக்கும்போது இடையில் நின்றுபோவது போன்றவை பொதுவாக நமக்கு அதிர்ச்சியளிப்பவை . மழைக் காலத்தில் உங்களின் வாகனம் எதாவது பிரச்னையில் சிக்கி விட்டால் இங்கே சொல்லப்பட்டுள்ள சில இன்றியமையாத தேவைகளை உங்களின் மனதில் நினைவு வைத்துக்கொள்ளுங்கள் இது மேலும் உங்களின் வாகனங்களுக்கு சேதம் ஏற்படாமல் இருப்பதை தவிர்க்க உதவியாக இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியும். மழைக் காலங்களில் சாலைகளில் வாகனத்தை ஓட்டி செல்லும் போது சில சூழல்களை நாம் தவறாமல் சந்திக்க முடியும் அந்த சூழல்களை முதலில் பார்ப்போம்

 
சூழ்நிலை 1
 
ஒரு இடத்திற்கு நீங்கள் அவசரமாக செல்ல வேண்டும் , கடுமையான மழை பெய்து அப்போதுதான் நின்று விட்டிருக்கிறது . சாலை எங்கும் மழை நீர் தேங்கி இருக்கிறது . அந்த  சாலையின் வழியாக காரை ஓட்டி சென்று கொண்டிருக்கிறீர்கள் , மழை நீரின் அளவு காரின் டயரை விட உயரமாக இருக்கிறது அப்போது நீங்கள் முக்கியமாக செய்யவேண்டியவை 
 
நீர் அதிகமாக தேங்கியிருக்கும் சாலையில் வாகனத்தை ஓட்டுவதை நிறுத்தினால் தேவையற்ற சேதத்தை தவிர்க்க முடியும். மேலும் உடனே உதவிக்கு அருகில் இருக்கும் யாரையாவது அழைக்கவும்
மழைநீர்ல் சிக்கி நின்றுவிட்ட வாகனத்தை ரீ-ஸ்டார்ட் செய்வதையோ , தள்ளுவதையோ தவிருங்கள் இல்லையென்றால் வாகனத்தின் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக்கல் சிஸ்டம் சேதமடைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
 
சூழ்நிலை 2 
 
கார் டயரின் பாதியை மூழ்கடிக்கும் அளவு தண்ணீர் சாலையில் தேங்கியிருந்தால் முடிந்தவரை காரை அந்த சாலையில் ஓட்ட வேண்டாம். தவிர்க்க முடியாத சூழலில் அந்தச் சாலையில் நீங்கள் செல்ல வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
ஒன்று அல்லது இரண்டாவது கியருக்கு மாற்றுங்கள் 
 
ஆக்சிலேட்டரில் காலை வைத்து ஆர்பிஎம் லெவலை அதிகப்படுத்துவதன் வழியாக சைலென்சருக்குள் தண்ணீர் புகாதாவாறு செய்ய முடியும் 
 
வண்டியின் வேகத்தை குறைக்க வேண்டுமானால் கிளட்சை பயன்படுத்துங்கள். ஆனால் என்ஜினின் வேகம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
 
வெள்ளம் சூழ்ந்த பகுதியை நீங்கள் கடந்து விட்டால் ஆக்சிலேட்டரை மிதித்து என்ஜினை சுழல விடுங்கள் உடனே சைலென்சர் சுத்தமாகிவிடும்
 
ஒரு வேளை என்ஜின் நின்றுவிட்டால் ரீ ஸ்டார்ட் செய்ய முயற்சிக்க வேண்டாம் , அப்படி முயற்சித்தால் என்ஜினின் பாகங்கள் சேதமடைய வாய்ப்பிருக்கிறது
 
சூழ்நிலை 3
 
காரின் ஒரு பகுதி தண்ணீரில் மூழ்கி என்ஜின் அல்லது காரின் மற்ற பகுதிக்குள் தண்ணீர் புகுந்து விட்டால்
உடனடியாக பேட்டரியை, மற்றும் மற்ற எலக்ட்ரிக்கல் சம்பந்தமான இணைப்பை துண்டிக்க முயலுங்கள் .
 
கார் சம்பந்தமான தொழிநுட்பத்தில் அனுபவம் வாய்ந்தவர்களின் உதவியை நாடுங்கள். காருக்கோ ,என்ஜினுக்கோ எதாவது சேதம் ஏற்பட்டிருக்கிறதா என்பதையும் , என்ஜின், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பாகங்கள் மற்றும் பேட்டரி போன்ற மற்ற பொருட்களுக்குள் தண்ணீர் எதாவது புகுந்திருக்கிறதா என்று பரிசோதித்து தெரிந்து கொள்ளுங்கள்
 
ஒரு வேளை இரு சக்கர வாகனமாக இருந்தால் தள்ளியோ ,உதைத்தோ ,வளைத்தோ ஸ்டார்ட் செய்வதை முயற்சிக்க வேண்டாம் .
 
சூழ்நிலை 4
 
அதிக நேரமாக உங்களின் கார் தண்ணீரில் மூழ்கியிருந்தால்  முதலில் பேட்டரியின் இணைப்பை துண்டியுங்கள்
 
உடனடியாக வாகனத்தின் லூப்ரிகன்ட் மற்றும் திரவப் பொருட்களை மாற்றிவிடுங்கள்
 
வாகனத்தை சீரமைக்க, துருப்பிடிக்காமல் ,பூஞ்சையாகாமல் இருப்பதற்காக தெளிக்கப்படும் திரவத்தை தெளியுங்கள் 
 
வாகனத்தின் பாகங்கள் முறையாக செயல்படுகிறதா இயங்குகிறதா என்று சரி பார்க்கவும் 
 
நீங்கள் எவ்வளவு முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு இருந்தாலும் உங்களின் வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டு இருந்தால் அதற்காக கவலைப்பட வேண்டாம் . இழப்பீடு கோரிக்கையை தாக்கல் செய்ய இதோ உதவியாக இருக்கிறது சுலபமான சில எளிய வழிமுறைகள் 
 
உடனடியாக இழப்பீடுக்கான கோரிக்கையை தாக்கல் செய்யுங்கள் 
 
வாகனம் சேதத்திற்கு உள்ளான 48 மணி நேரத்திற்குள் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு தகவலை தெரிவியுங்கள். சேதமடைந்த பகுதியை புகைப்படம் எடுத்து உங்களின் கோரிக்கையுடன் இணைப்பது அவசியம்.
 
உங்களின் கார் ஒரு நிலையில் இல்லை என்றால் அதை நகர்த்துவதை தவிர்த்து அதே இடத்தில் விட்டு விட்டால் மேலும் அதிகமாக சேதமடைவதை தவிர்க்க முடியும்
 
காப்பீட்டு நிறுவனத்தின் அனுமதி பெற்ற பிறகே வாகனம் பழுதுபார்க்கும் இடத்திற்கு உங்களின் காரை இழுத்து செல்ல வேண்டும் 
 
கார் ஒருமுறை பழுது பார்க்கும் இடத்தை அடைந்துவிட்டால் ,சேதமடைந்த பகுதிகளை சரிபார்க்கும் முன்பு, மதிப்பீட்டாளர் சேதமடைந்த பகுதிகளின் மதிப்பை முதலில் அளவீடு செய்ய வேண்டும் 
 
மதிப்பீட்டாளர் சேதமடைந்த பகுதிகளை சோதித்து மதிப்பீடு செய்யும் வரை வாகனத்தை பழுது பார்க்க அனுமதிக்க வேண்டாம். இழப்பீடுக்கான கோரிக்கையை பதிவு செய்த பின் வருகிற ஒரு வேலை நாளில் மதிப்பீட்டாளர் வாகனத்தை சோதனை செய்து மதிப்பிடுவார்.
 
இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு தொடர்புடைய வாகன பழுதுபார்க்கும் கடைகளுக்கு முன்னுரிமை தாருங்கள் : வாகனம் பழுது பார்க்கும் கடைகள் இன்ஷூரன்ஸ் கம்பெனியுடன் டை அப் வைத்திருக்கிறார்களா என்று பாருங்கள் .அப்படி டை அப் வைத்திருக்கும் பழுது பார்க்கும் கடைகளில் நீங்கள் சேதமடைந்த பகுதிகளை பணமில்லாமலே சரி செய்து கொள்ள முடியும். இன்ஷூரன்ஸ் கம்பெனியுடன் எந்தெந்த பழுதுபார்க்கும் கடைகள் டை அப் வைத்திருக்கிறது என்று இன்ஷூரன்ஸ் கம்பெனியின் இணையதளம் மூலமாகவும் , வாடிக்கையாளர் சேவை மையத்தை போனில் அணுகுவதன் மூலமாகவும் நாம் தெரிந்துகொள்ளலாம்.
 
ஒருவேளை நீங்கள் இன்ஷூரன்ஸ் கம்பெனியின் நெட் ஒர்க்கில் இல்லாத வாகன பழுதுபார்க்கும் கடையில் பழுது பார்த்து இருந்தால் அதற்கான தொகையை முதலில் நீங்கள் செலுத்த வேண்டும் . நீங்கள் செலுத்திய தொகைக்கான பில் மற்றும் ரசீதுகளை வைத்து இன்ஷூரன்ஸ் கம்பெனியிடமிருந்து இழப்பீட்டை பெறலாம் 
 
24 x 7 சாலையோர உதவி :
 
இது வாரத்தின் ஏழு நாட்களும் இருபத்து நான்கு மணி நேரமும் செயல்படுகிற சேவை ஆகும் ,சாலையோர உதவியை வழங்குகிற கூடுதல் கவரேஜ்ஜை நீங்கள் தேர்வு செய்து இருந்தால் இந்த வசதி உங்களுக்கு உறுதியாக பயன்படும் . உங்கள் வாகனம் சேதமடைந்த இடத்தில் இருக்கும் உதவியாளர்கள் உங்களின் வாகனத்தை இழுக்க மட்டும் உதவாமல், பேட்டரி, டயர் போன்றவற்றில் ஏற்படும் சின்ன சின்ன பழுதுகளை சரிசெய்யவும், எரிபொருள் மற்றும் மாற்று பயண ஏற்பாடுகள் ஏதாவது தேவைப்பட்டால் அதற்கு உதவவும் , மருத்துவ உதவி தேவைப்பட்டால் அதை ஏற்பாடு செய்து தரவும் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்து தரவும் எப்போதுமே அவர்கள் தயாராக இருப்பார்கள். இந்த கவரேஜ்ஜை நீங்கள் தேர்ந்து எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. 
 
ஏனெனில் மேலே சொல்லப்பட்டுள்ள எதாவது சூழ்நிலையில் உங்களுக்கு உதவி தேவைப்படும் போது இந்த சேவை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 
 
கூடுதலான கவரேஜ்கள்:
நீங்கள் மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசியை புதிப்பிக்கும் போது காப்பீட்டாளரால் வழங்கப்படும் கூடுதல் கவரேஜ்ஜை தெரிவு செய்வது நல்லது 24 x 7 உதவி, தேய்மானம் பாதுகாப்பு, என்ஜின் பாதுகாப்பு போன்றவைகளுக்கு கூடுதல் கவரேஜ்கள் உள்ளன. வழக்கமாக நாம் எடுக்கும் மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு கீழே இந்த கூடுதலான கவரேஜ்கள் வராது. உதாரணத்திற்கு நீர்க்கசிவு காரணமாக என்ஜினில் கோளாறு ஏற்பட்டாலோ , ஆயில் கசிவு காரணமாக கியர் பாக்ஸ் உடைந்தாலோ கூடுதல் கவரேஜ்ஜை பெறவில்லை என்றால் உங்களின் பாக்கெட்டில் இருந்துதான் பணத்தை பழுதுபார்ப்பதற்கு கொடுக்க வேண்டும் 
 
மொபைல் ஆப்ஸை பயன்படுத்தி வேகமாக இழப்பீடுக்கான கோரிக்கையை பதிவு செய்யுங்கள்: இன்றைக்கு அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் மொபைல் ஆப்ஸை வெளியிட்டு இருக்கிறது. ஆப்ஸ் மூலம் நாம் சுலபமாக இழப்பீடு கோரிக்கையை பதிவு செய்ய முடியும் . இழப்பீடு பற்றிய நிலை, ஆவணங்களை சமர்ப்பித்தல், அருகிலிருக்கும் காப்பீட்டு நிறுவனத்திற்கு தொடர்புடைய பழுது பார்க்கும் கடைகள் போன்றவற்றை ஆப்ஸின் மூலமாக நான் தெரிந்துகொள்ளலாம் நம் வசதிக்கு தகுந்த மாதிரி இந்த ஆப்ஸை நாம் டவுன்லோடு செய்து கொள்ளலாம் 
 
வரப்போகிற பருவ மழைக் காலத்தில் உங்களின் காருக்கு ஏற்பட போகும் பிரச்னையிலிருந்து பாதுகாத்து கொள்ள எச்சரிக்கையாக இருங்கள் . உங்களுக்கு என்ன வேண்டும் என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ,வரப்போகிற கவலைகளிலிருந்து உங்களை விடுவித்து கொள்ளுங்கள்.
 
 
                                                                                                                                                           தொகுப்பு : த.சக்திவேல் 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ