Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்ஃபோசிஸ்: நிகரலாபம் 5% உயர்வு


இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிகரலாபம் அதிகரித்து உள்ளது . 2015-16 ம் நிதி ஆண்டுக்கான முதலாம் காலாண்டில் ஒட்டு மொத்த நிகர லாபம் 5 % உயர்ந்து ரூ. 3,030 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் நிகர லாபம் ரூ. 2,886 கோடியாக இருந்தது. 
இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது..2014-15 ம் நிதி ஆண்டுக்கான முதலாம் காலாண்டில் ரூ.12,770 கோடியாக இருந்த மொத்த வருமானம் 12.4 % உயர்ந்து ரூ. 14,354 கோடியாக உள்ளது 
நிகர லாபம் அதிகரித்து இருந்தாலும் இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்கின் விலை தற்போதைய நிலையில் சுமார் 0.68% குறைந்து வர்த்தகமாகி வருகிறது. 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ