Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆசியாவின் தலைசிறந்த 50 நிறுவனங்களில் இந்தியாவின் 10 கம்பெனிகள்

 ஆசியாவிலேயே   சிறந்த  50 நிறுவனங்களின் பட்டியலை        ஃ போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது . அதில் இந்தியாவின்  அரோபிந்தோ பார்மா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க்  உட்பட  10 நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.  

 

                  தொடர்ந்து    ஐந்து வருடங்களாக இந்த பட்டியலில்   இடம்பிடித்துள்ள அதிக நிறுவனங்களை  கொண்டுள்ள இரண்டாவது நாடாக  இந்தியா இருக்கிறது. முதல் இடத்தில் சீனா இருக்கிறது. சீனாவின் இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 
 
      ஹெச்டிஎஃப்சி பேங்க்கை ஒளிமயமான நிறுவனம் என்று ஃபோர்ப்ஸ் பாராட்டுகிறது . கடந்த பத்து ஆண்டுகளில் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட ஆசியாவின் தலைசிறந்த 50 நிறுவனங்களின் பட்டியலில் ஒன்பது முறை ஹெச்டிஎஃப்சி பேங்க்  இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. வேறு எந்த நிறுவனமும் இத்தனை முறை இடம் பிடித்ததில்லை 
 
 இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள மற்ற இந்திய நிறுவனங்கள் லுபின், மதர்சன் சுமி சிஸ்டம்ஸ், சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ் ,டாடா மோட்டர்ஸ் ,டெக் மஹிந்திரா, டைட்டன். 
 
                                    சீனா, இந்தியாவை தொடர்ந்து தென் கொரியா,மலேசியா,பிலிப்பைன்ஸ்,சிஙகப்பூர், இந்தோனேஷியா, ஜப்பான் நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில்  இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ