Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விப்ரோ-ன் நிகரலாபம் 3.6% குறைவு

 இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவின் நிகர லாபம் குறைந்தது. 2015-16 ம் நிதி ஆண்டுக்கான முதலாம் காலாண்டில் நிகர லாபம் 3.6 % குறைந்து ரூ. 2,188 கோடியாக உள்ளது. 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டின் முடிவில் நிகர லாபம் ரூ. 2,272 கோடியாக இருந்தது. 


இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டின் முடிவில் ரூ. 12,171 கோடியாக இருந்த மொத்த வருமானம் 2015-16 ம் நிதி ஆண்டுக்கான முதலாம் காலாண்டில் ரூ.12,371 கோடியாக உயர்ந்துள்ளது


நிகர லாபம் குறைந்திருந்தாலும் விப்ரோ நிறுவனப் பங்கின் விலை தற்போதைய நிலையில் 0.52 % அதிகரித்து வர்த்தகமாகியது 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ